Natural Sciences Read in english

சிறுநீரகக் கோளாறுப் பிரச்சனை

By Niroshan Thillainathan on April 20th, 2014

சிறுநீரகக் கோளாறுப் பிரச்சனைநண்பர்களே, சிறுநீரகக் கோளாறுப் பிரச்சனை இன்று பலரிடையே பயமுறுத்தும் வகையில் அதிகரித்து உள்ளது. அதுவும் இந்நோய் மேலும் பரவ, அளவுக்கு அதிகமான நச்சுப் பொருள்கள் உட்கொள்வதே ஓர் முக்கிய காரணமாக அமைகின்றது. இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், இந்தச் சிறுநீரகக் கோளாறு நாளடைவில் மனிதனின் உடல் நலத்தை முழுவதுமாகச் சீர்குலைக்கக் கூடியது. உடல் பாகங்களில் வீக்கம், மயக்கம், முதுகு வலி, சிறுநீர் கழிப்பதில் மாற்றம், அரிப்பு, வறண்ட தோல் போன்ற பிரச்சனைகள் உடலில் ஏற்பட்டால், நம்முடைய சிறுநீரகம் சரி வர இயங்கவில்லை என்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இவ்வாறு நமது சிறுநீரகம் சரியாக வேலை செய்யாமல் விடுவதால், நம் உடலிலிருக்கும் கழிவுப் பொருள்கள்  முறையாக சுத்திகரிப்புச் செய்து அகற்ற முடியாமல் போய்விடும். எனவே, மிகவும் அவதானமாக இருந்துகொள்ளுங்கள் நண்பர்களே! இவ்வாறான அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உடனடியாக ஓர் மருத்துவரை நாடி ஆலோசனை கேளுங்கள்!

இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Facts about kidney disease


In recent days, kidney diseases have increased at an alarming rate among the population. The reason for this rapid rise is the increasing amount of toxic substances that we eat along with our food. The most important thing is that, kidney diseases affect the overall health of a person if it’s not treated effectively. If you suffer from edema, giddiness, back ache, alteration in the urination habits, itching and dry skin, it may indicate that your kidneys are not functioning properly. When the kidney does not function properly, the metabolic waste products are not treated and excreted properly from the body. So, be careful when any of the symptoms appear in your body. Don’t forget to consult your clinician immediately.

Did you like this Arivu Dose? Post your comments below.


Holly Fischer | Creative Commons by-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

1 Comments

  • Take Ur S - 05/10/2014, 9:51 AM

    YES