Natural Sciences Read in english

ஹைப்பர்தைமீசியா

By Niroshan Thillainathan on June 25th, 2014

ஹைப்பர்தைமீசியா மறதி என்கிற மன நிலை எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த ஒன்றாகும். ஆனால், அதற்கு எதிரான ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது தான், வாழ்வின் சிறு சிறு விவரங்களையும் நினைவில் கொள்ளும் ஒரு மூளையைப் பெற்றிருப்பது ஆகும். இது ஹைப்பர்தைமீசியா என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் தைமீசிஸ் என்றால் “நினைவு கொள்ளுதல்” என்று பொருள் மற்றும் ஹைப்பர் என்றால் “மிதமிஞ்சிய” என்று பொருள். இந்த வகையான நினைவினைப் பெற்ற மனிதர்கள் அவர்களின் தினசரி வாழ்வின் ஒவ்வொரு சிறு சிறு விவரங்களையும் நினைவு கூற இயலும். அவர்களின் மூளை அடிப்படையில் எந்தவிதமான தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சிறு சிறு தகவல்களையும் சேமித்து வைக்கும்.

இந்த மன நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதுமே தன்னால் கடந்த கால விஷயங்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது என்றும் மேலும் அதற்காக எந்த தனிப்பட்ட முயற்சியும் செய்யவில்லை என்றும் கூறுகின்றனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட நாட்கள், இடங்கள், நேரம் ஆகியவற்றை நினைக்கும்போது, அவர்களால் அவற்றை தெளிவான காட்சிகளாக தொடர்புபடுத்த முடிகிறது. பிற மன முரண்பாடுகளைப் போல் இல்லாமல், இந்த மனநிலை பெற்ற மனிதர்கள் கடந்த கால சம்பவங்களின் நாள், கிழமைகளை கடின முயற்சி செய்து கணக்கிடத் தேவையில்லை. இதனால் சில சமயங்களில் இதனை மிதமிஞ்சிய தன் நினைவு எனவும் அழைப்பர்.

ஹைப்பர்தைமீசியா பாதிக்கப்பட்ட மனிதர்கள் தனிப்பட்ட நிகழ்வுகளை நினைவு கொள்ளுவதைப்போல, மனனம் செய்வது போன்ற விஷயங்களில் அதே போன்ற நினைவாற்றலை செயல்படுத்துவதில்லை. தனிப்பட்ட நிகழ்வுகளை நினைவுறுத்தும் போது மட்டும் நினைவுகளை சேமிக்க அவர்கள் மூளையின் வெவ்வேறு வகையான பகுதிகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஆச்சரியமாக இல்லையா நண்பர்களே? இதைப் பற்றிய உங்கள் கருத்துகளைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Exceptional memory caused by hyperthymesia


We all would have heard of amnesia. Have you ever heard of something opposite to it? Well! It is the presence of a brain which remembers even trivial facts and information. This is known as Hyperthymesia. In Greek “thymes” means “to remember” and “hyper” means “excess”. People with such type of memory can recall even the happenings of day to day life. Their brain stores up even things of very little importance.

People with such psychological condition says that they are able to communicate with their past without making any effort for it. When they think about a specific date, place and time, they are able to picturize the happenings very clearly. Unlike other mental conflicts, such people can calculate the date and days of specific incidents effortlessly. Thus it is sometimes called excessive memory.

People affected with Hyperthymesia do not use their memory power to memorize facts as they use it for personal information. They store this personal information in different part of their brain.

Isn’t it interesting? Post your comments below.


Gnarlycraig | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

6 Comments

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 06/28/2014, 12:46 AM

    நண்பர்களே, உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி Prasanth Shaz Sampath Kumar Gánésh Jaï Bharathi Premsanth Kogulan Sathananthan

  • Sampath Kumar - 06/26/2014, 4:54 PM

    Sry enaku itu vedam

  • Prasanth Shaz - 06/26/2014, 10:38 AM

    some times nanum apadi than

  • Gánésh Jaï - 06/25/2014, 6:56 PM

    Gud msg bro

  • Bharathi Premsanth - 06/25/2014, 4:51 PM

    Interesting msg

  • Kogulan Sathananthan - 06/25/2014, 3:35 PM

    Thanks