Science & Mystery Read in english

அணையா விளக்குகள்

By Niroshan Thillainathan on December 31st, 2014

Ever-Burning Lampsஉங்களுக்கு ஒன்று தெரியுமா நண்பர்களே? எவ்வித எரிபொருளும் இல்லாமலே தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன! உடனே இது இக்கால அறிவியல் கண்டுபிடிப்பு என்று எண்ணிவிடாதீர்கள்! ஐந்தாம் நூற்றாண்டு காலகட்டத்திலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

இவை எங்கு பயன்படுத்தப்பட்டது தெரியுமா? இறந்தவர்களின் கல்லறையில் தான். அவர்கள் இறந்தபின்பு மோட்சத்திற்கான வழி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த விளக்கினையும் அவர்களுடன் சேர்த்து அடக்கம் செய்துள்ளனர். இதில் பெரும்பாலான விளக்குகள் சேர்த்து புதைக்கப்பட்டிருந்தாலும், ஒரு சில விளக்குகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவை இன்னும் எரிந்துகொண்டே இருக்கின்றன என்பதுதான். மூட நம்பிக்கை உடையவர்கள் இறந்தவர்கள் பாவம் செய்தவர்கள் போன்ற பல காரணங்களைக் கூறினாலும் அறிவியல் வழியாகப் பார்க்கும்போது இது ஒரு விந்தையான செயலே.

ஹீப்ரு சமுகத்தினர் இதில் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். அவர்கள் எதைக் கண்டறிந்து பாதுகாத்து வந்தனரோ அதைத்தான் நாம் தற்போது மின்சாரம் என்று பயன்படுத்தி வருகின்றோம். யூதச் சட்டங்களைப் படித்தவரான ஜெச்சில்லி கண்டறிந்த விளக்கானது எந்தவித தூண்டுதலும் இல்லாமலே, ஏன் எரிபொருளும், திரியும் கூட இல்லாமலே எரியத் தொடங்குமாம் என்ற கதைகளும் உள்ளன.

இன்றைய காலகட்டத்தில் கூட இது போன்ற அணையா விளக்குகள் கண்டுபிடிக்க முடியாமல் போன நிலையில் அந்தக் காலத்திலேயே எப்படி கண்டறிந்திருப்பார்கள்? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கண்டிப்பாக கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Ever-Burning Lamps


Hi friends! Do you know that a new type of lamp has been created which burns forever without use of any fuel? Don’t think that these are recent scientific inventions. They have been used in the 5th century BC. Do you know where they were used? In the tombs of the dead! These lamps were placed along with the dead to help them to attain salvation. Although most of the lamps were buried, some of them have been discovered now. The most amazing thing is that they are still burning. Although people with supernatural beliefs consider dead people as sinners, it is a wonder when viewed in a scientific perspective. Hebrews played an important role in it. The electricity which we use now is what they have discovered and protected for so many years. A French rabbi named Jechiele who has studied the Hebrew rules has found a lamp which burns without any wick or fuel. When it is impossible to create such a lamps even now, how was it possible to create them in those days? Post your comments about this Arivu Dose below.


http://i0.wp.com/listverse.com/wp-content/uploads/2014/08/lamps.jpg?resize=632%2C314

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

1 Comments

  • jp.vimal.SIMA KAREEM COLANY vedaranyam.TKNAGAPATTINAM.DT - 01/20/2015, 2:55 PM

    very interesting and useful subject.thanks