Natural Sciences Read in english

விலங்குகளில் எத்தனை வகைகள் உள்ளன

By Niroshan Thillainathan on April 2nd, 2014

விலங்குகளில் எத்தனை வகைகள் உள்ளனவானத்தில் பார்த்தால் பறவைகள், தரையில் பார்த்தால் யானையிலிருந்து எலிவரை மற்றும் கடலினுள் மீன் வகைகள் காணப்படுகின்றன. ஆனால், ஆக மொத்தத்தில் விலங்குகளில் எத்தனை வகைகள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா? ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டால் பூமியில் எத்தனை உயிரினகள் வாழ்கின்றது என்பது பற்றியான ஆராய்ச்சியில் முதல் அடி கூட முழுமையாக எடுத்து வைக்கவில்லை என்று கூறுவார்கள்.

ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப் படி ஒவ்வொரு வருடமும் 15,000 உயிரினங்களுக்கும் மேலாக கண்டுபிடிக்கப் படுகின்றன. இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், இது பற்றியான ஆராய்ச்சிகள் அதிகமாக வட அரைக்கோளத்திம் (northern hemisphere) எனப்படும் புவிமையக் கோட்டுக்கு வடக்கேயுள்ள நாடுகளில் மட்டும் தான் நடைபெற்று வருகின்றது. அது ஏன் என்றால் வட அரைக்கோளத்தில் உள்ள நாடுகள் தென் அரைக்கோளத்தில் உள்ள நாடுகளை விட தொழில்நுட்ப வசதிகள் அதிகமாக கொண்டதால். எனவே, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு உயிரினங்கள் ரகசியமாய் புதைந்து இருக்கின்றன.

இது எல்லாம் போதாது என்று, மேலும் 99 சதவீத உயிரினங்கள் கடலுக்கு அடியில் வாழ்கின்றன என்றும் விஞ்ஞானம் கூறுகின்றது. நாம் இன்று வரை கடலினுள் வாழும் உயிரினங்களில் பத்து சதவீதத்திற்கும் குறைவான உயிரினங்களைத் தான் கண்டுபிடித்துள்ளோம்! ஒரு கணிப்புப் படி புவியில் 5,000,000 தொடக்கம் 100,000,000 உயிரினங்கள் வாழ்கின்றன என்று கூறப்படுகிறது. இவற்றுள் தற்போது நாம் 2,000,000 உயிரினங்களைத் தான் கண்டுபிடித்து விட்டோம்.

இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Estimated Number of Animal Species on Earth


There are birds in the sky, fishes in the water and unimaginable number of animals from the tiny mouse to a giant elephant on the land. Do you know how many types of animals are there in the world? Researchers say that we have not yet taken a complete step in the process of estimating the types of animals in the whole world.

According to Researchers, there are 15,000 new animals being discovered every year. The surprising fact is that such researches are being conducted only in the countries in the Northern hemisphere. This is because, the technological advancement in the countries of the Northern hemisphere is much more than those in the Southern hemisphere. Hence, there are so much more life forms hidden in countries like Australia.

More than this, it is a scientific fact that 99% of the life forms live under water. Till now, we have discovered only less than 10% of this marine life forms. According to an estimation, there are around 5,000,000 to 100,000,000 life forms of which we have discovered only 2,000,000.

Did you enjoy reading this Arivu Dose?  I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Wikipedia | Public domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

2 Comments

  • Vigneswary Subramaniam - 04/02/2014, 3:36 PM

    இதுக்குள்ள கடவுள் இல்லையென்றும் கூறுதாம் அறிவியல்..

  • Aaron Asher - 04/02/2014, 3:01 PM

    nice message