Social Sciences Read in english

உயரமான இடத்தில் வசிப்பது நோய்களில் இருந்து பாதுகாக்கும்

By Niroshan Thillainathan on August 27th, 2014

உயரமான இடத்தில் வசிப்பது நோய்களில் இருந்து பாதுகாக்கும்நண்பர்களே, உங்களுக்கு ஒன்று தெரியுமா? தற்கொலை விகிதத்திற்கும், உயரத்திற்கும் பலம் வாய்ந்த தொடர்பு இருக்கின்றது என்று கூறினால் அதை நம்புவீர்களா? ஒன்றும் பண்ண முடியாது, நம்பத் தான் வேண்டும்! அது ஏன் என்று இந்த அறிவு டோஸில் அறியத் தருகின்றேன்.

ஆராய்ச்சியாளர்கள், அமெரிக்காவிலுள்ள 2,584 மாவட்டங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தனர். அதன் படி, 1979-1998 ஆண்டுகளில் 596,704 தற்கொலைகள் அமெரிக்காவில் நடந்துள்ளன. இது மொத்த இறப்பான 42,868,100 மக்களில் 1.4 சதவீதம் ஆகும். இது சராசரியாக ஒரு மாவட்டத்திற்கு 100,000 மக்களில் 14 பேர் என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. இந்த விவரங்களை ஆராய்ந்த போது தான், அந்தத் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. மக்களின் வயது, பாலினம், இனம் அல்லது அவர்களின் வருமானம் போன்ற காரணிகளைக் காட்டிலும், அவர்கள் வசித்த இடத்தின் உயரம் முக்கியப்பங்கு வகித்தது.

தற்கொலை விகிதத்தினை 50 உயரமான மற்றும் 50 தாழ்ந்த மாவட்டங்களுக்குக் கணக்கிட்டபோது, உயரமான இடங்களில் 4.2 தற்கொலைகளுக்கு, தாழ்ந்த இடங்களில் 1 தற்கொலை தான் நிகழ்ந்தது என்பது தெரியவந்தது. அதாவது உயரத்தினைப் பொறுத்து அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் விகிதமும் மாறுபட்டது. இது சாதாரண ஒற்றுமையாக இல்லை என்பதால், இது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த ஆய்வுகளின் முடிவில் தெரிந்தது இரு விஷயங்கள்: ஒன்று, உயரமான இடங்களில் வசிப்பது பல நோய்களிலிருந்து பாதுக்காப்பைத் தருகிறது என்பதும், இரண்டாவது, அதைவிட வியப்பூட்டும் விடயமாக உயரமான இடங்களில் தற்கொலை விகிதம் அதிகமாகும் வாய்ப்பும் உள்ளது என்பதும் தான். கடல்மட்டத்திலிருந்து உயரமான இடங்களில் வசிப்பவர்களுக்கு இது கண்டிப்பாக அதிர்ச்சியளிக்கும் செய்தியாக இருந்தாலும், இது கணக்கெடுப்பு முடிவுகள் மட்டுமே. எனவே பயந்துவிடாதீர்கள், நண்பர்களே. இருந்தாலும், இது மிகவும் வியப்பூட்டும் விடயம் அல்லவா? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.


English Version

Effects of High Altitude on Humans


Do you know that the height of a place is closely linked to suicide rates? Researchers have gathered information about 2584 districts in America, and found out that a total of 596,704 suicide cases have been registered there from the year of 1979 to 1998. The total number of  suicide cases makes up 1.4 percentage of 42,868,100 residents of America. This means, around 14 out of 100 people commit suicide at an average rate in each district of America. Researchers were keen to know the reasons behind the suicide cases among Americans and hence carried out a detailed study. As a result, the researchers found out that the height of the victim‘s residential area is the leading cause besides their age, gender, race and salary. Also another study had been conducted to identify the relationship between the height of a residential place and suicidal rates, where the ratio of 50 higher residential places to 50 low level residential places was determined. The outcome of that study was very strange as the ratio obtained was 4.2 : 1, meaning 4.2 suicide cases were registered in higher residential places whereas only one in a low level residential place. Apart from that, the study also showed that the people from higher residencies are having better chances of protecting themselves from many kind of diseases, but at the same time they are also prone to suicides. This Arivu Dose might be a shocking and frightening input to many of you, especially those living at higher regions.

How do you feel after reading this Arivu Dose? I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


rapedius | Public Domain, via Pixabay.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

10 Comments

 • Kali Muthu - 08/30/2014, 3:19 AM

  தவறான தகவல்

 • Ramchandrn Ramila - 08/29/2014, 8:18 AM

  அமெரிக்காவின் ஆராய்ச்சி களெல்லாம். உண்மையாகிவிடாது !காரணம் உலகத்தில் உயரமான நாடு நேபாள் தான் ! ஆனால் தற்கொலைகள் மிக்க குறைவுதான்.

 • Suresh Guru - 08/29/2014, 6:58 AM

  Please post good things , life is infinitive gift, it is not knowledge, my class met nam arivu but he has no arivu like u my class master scold him like , I remember to u ,

 • Ksd Raja - 08/29/2014, 6:52 AM

  thatkolaiyil jump panni saavathai maddum aaivil karuththil kolla koodathu

 • Sarjil Hamza - 08/29/2014, 5:51 AM

  Ys…bcos..
  Uyarmana idathule irunthu jump pannum pothu…. manisan adipattu savurathuku mudalleye setthuruvan..
  That is the reasion.bro

 • Anand Sachin - 08/29/2014, 4:27 AM

  My native is ooty kadal mattathil irunthu 2000 adiku mel

 • Packi Thillainathan - 08/28/2014, 2:52 PM

  நான் உயரமான இடத்துக்கு மாறப்போகிறேன்.தற்கொலை செய்வதற்காக இல்லை.நோய் நொடியில்லாமல் வாழ்வதற்கு.

 • Gánésh Jaï - 08/27/2014, 5:42 PM

  Bro….nan kuda 3rd floor than eruken bro. …..

  • Senthil Kumar - 08/28/2014, 5:54 AM

   Appa kudhichiru