Natural Sciences

எபோலா என்னும் உயிர்கொல்லி வைரைசு

By Niroshan Thillainathan on August 9th, 2014

எபோலா என்னும் உயிர்கொல்லி வைரைசுநண்பர்களே, “எபோலா” வைரசு (Ebola Virus) எனப்படும் ஒருவகை நுண்ணுயிரி தற்போது பல உயிர்களைக் கொன்று வருகிறது என்பது உங்களில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். மேற்கு ஆப்பிரிக்காவில் பரவலாகப் பலரைத் தாக்கி வரும் இந்த வைரசு உலகின் வேறு இடங்களுக்குப் பரவுவதற்கும் சாத்தியங்கள் நிறைய உள்ளன என எண்ணப்படுகின்றது. எனவே, இவ்வைரசுக் காய்ச்சலைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது அத்தியாவசியமானது என நான் நினைப்பதால், இந்த அறிவு டோஸில் அதைப் பற்றி உங்களுக்கு அறியத் தருகிறேன்.

இந்த வைரசு விஞ்ஞான உலகத்திற்குப் புதியதாக இல்லாவிட்டாலும், சமீப காலமாகத் தான் மனிதனுக்கு எமனாக உருமாறியது. இதுவரை மேற்கு ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த நோய் பரவியிருப்பதாகவும், இன்று வரை இதனால் தாக்கப்பட்ட ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை என்றும் உலக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வைரசு இயற்கையாகப் பழங்களை மட்டும் உட்கொள்ளும் ஒரு வகை வௌவால்களின் உடலில் இருக்கும். நாளடைவில் வௌவால்களிடமிருந்து பன்றிகள் மற்றும் இன்னும் பல மிருகங்களுக்குப் பரவியது. மனிதன் இவ்வாறு தாக்கப்பட்ட பன்றி மற்றும் வேறு உயிரினங்களை உட்கொள்ளும் பொழுது, இவ்வைரசுகள் மனித உடலுக்குள் சென்றடைகின்றன. பின்னர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு மனிதனிடமிருந்து இன்னுமொரு மனிதனுக்கு தொத்திப் பரவுகின்றது.

எனவே, இதைத் தவிர்க்க, நாம் சுய சுத்தத்தைப் பேண வேண்டும். முதலில், பன்றி மற்றும் வேறு விலங்குகளுக்கு மத்தியில் இருக்கும் பொழுது முறையான கவசங்களை அணிந்திருக்க வேண்டும். மேலும், முறையாக உணவை சரியான தட்ப வெப்பத்தில் சமைத்து உண்ண வேண்டும். அதைவிட இந்த வைரசு தாக்கத்திற்கு உள்ளான அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக மருத்துவரைக் கண்டு, பொது இடங்களில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பொதுவாக, இந்த வைரசு ஒருத்தரைத் தாக்கியுள்ள அறிகுறிகள் 12 நாட்கள் வரை மனித உடலில் நீடித்திருக்கும். முதல் 9 நாட்களில் பயங்கர தலைவலி, மயக்கம், கடுங்காய்ச்சல், தசை வலி ஏற்படும். 10வது நாளில் இன்னும் அதிகமான காய்ச்சலுடன் இரத்த வாந்தி மற்றும் சோர்வுக்கு இலக்காகுவர். 11ம் நாளில் சிராய்ப்புகள், மூளை சிதைவு, மூக்கு வாய் மற்றும் மலவாயிலிருந்து இரத்தக் கசிவு ஏற்படும். இறுதியாக 12ம் நாள் முழு நினைவயும் இழந்து, வலிப்பு, உள் உறுப்புகளில் இரத்தக் கசிவு ஏற்பட்டு இறந்து விடுவர். இதுவரையிலும் 932 மனிதர்களை இந்த வைரசு தாக்கியுள்ளதாகவும், அனைவரும் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரப்பூர்வாமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் கவலைக்கிடமான விடயம் என்னவென்றால், இந்த எண்ணிக்கை தினமும் அதிகரித்துக்கொண்டு போகின்றது என்பது தான்.

நண்பர்களே, இது சும்மா விளையாட்டு இல்லை. இந்த உயிர்கொல்லி வைரசின் வலையில் சிக்காமலிருப்பதே நமக்கு நல்லதாகும்! எனவே, இந்த அறிவு டோஸில் குறிக்கப் பட்ட விடயங்களை நன்று புரிந்துகொண்டு இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். மேலும் இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.

Photo: Wikipedia, License: Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

635 Comments

 • Vaidhi Saravanan - 08/15/2014, 8:10 AM

  Tnx for ur information

 • Tamil Satheesh - 08/15/2014, 7:29 AM

  Thanks… Afraid of that virus…

 • Umayal Swaminathan - 08/15/2014, 7:13 AM

  Arivu virus? U mean smart virus?

 • Pilendran Antony Thavarajah - 08/15/2014, 7:05 AM

  Oh my god. Tnx to information

 • Panchu Colours - 08/15/2014, 6:51 AM

  thanks for these information

 • Prem Mpk - 08/15/2014, 6:23 AM

  Thax u

 • Nifty Option - 08/15/2014, 6:14 AM

  (Y)

 • Gangaiamaran Amaran - 08/15/2014, 5:09 AM

  Ok thankingyou

 • Balaji Mohan - 08/15/2014, 5:03 AM

  intha vairasku ,canada,nadu madisen kandupuduchirukanganu arivechurukanga

 • Jothimani Jothimani - 08/15/2014, 4:55 AM

  Thanks bro..sila members intha awarness news ah padichittu atha pathi therinjikama intha news ku yenna mokka podalamnu thaan yosikiranga..bt they r well educater ,wt can v do bro..bt realy good bro.

 • Jsmraja Jsmraja - 08/15/2014, 4:25 AM

  T ks my Fri

 • Zubair Ahmed - 08/15/2014, 2:50 AM

  இந்த செய்தியை அதிகமாக பகிர்ந்து விழிப்புணர்ச்சியை ஏற்ப்படுத்துங்கள்

 • Theepan Raj - 08/14/2014, 10:46 PM

  You are right Senthil Kumar

 • Chokkan Thala - 08/14/2014, 10:22 PM

  Thank you

 • Ameen Noor - 08/14/2014, 9:34 PM

  suppaer frien

 • Tamizh Mani - 08/14/2014, 8:17 PM

  friends nengalum share panunga.

 • Asankar Sankar - 08/14/2014, 7:50 PM

  நண்றி நண்பரே.

 • Mohamed Aslam Aslam - 08/14/2014, 7:25 PM

  Thanks

 • Bala Chandran Jogeesan - 08/14/2014, 7:00 PM

  Virussa paidde velankal but aladerukera anndu thareuthu

 • Karmegam Yuvi - 08/14/2014, 6:34 PM

  thanku for msg.

 • Asok Kumar - 08/14/2014, 6:22 PM

  Tks for your information niroshan

 • Arunthathy Chandran - 08/14/2014, 6:16 PM

  Nalla arivurai thanks

 • Vijay Raj - 08/14/2014, 6:07 PM

  Thank u friend

 • Hema Latha - 08/14/2014, 4:53 PM

  Thanks for your information

 • Desingh Rajan - 08/14/2014, 4:49 PM

  Thanks…