Earth & Environment Read in english

பூமியிலுள்ள தண்ணீரின் வயது சூரியனை விட அதிகம்

By Niroshan Thillainathan on March 15th, 2015

Earth’s water is older than the sunஇந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு முக்கியத் தேவைகளுள் ஒன்று தண்ணீர். தண்ணீரினை அடிப்படையாகக் கொண்டுதான் நம் உலகில் எப்படி உயிரினங்கள் தோன்றியிருக்கும் என யூகித்து வைத்துள்ளோம். தற்போதைய கண்டுபிடிப்பு ஒன்று, நமது பூமி உற்பட சூரியக் குடும்பத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் விண்வெளியில் உள்ள பனிக்கட்டிகளில் இருந்து தோன்றியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

நமது பூமி தவிர மற்ற கிரகங்களிலும் தண்ணீர் உள்ளது ஆனால் உறைந்த நிலையில் உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்தினைப் பொறுத்து அவை தண்ணீராக மாறலாம், ஆனால் இவை எங்கிருந்து வந்தன, என்பது இதுவரை தெரியாத உண்மை. இதனை அறிந்துகொள்ளும் முயற்சியில் தான் தண்ணீரின் ஹைட்ரஜன் மூலக்கூறு மீதான ஆராய்ச்சியினை தொடர்ந்தனர். அதில் ஹைட்ரஜனின் ஐசோடோப்பான டியூட்டிரியம் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அப்போதுதான், ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பநிலை மாற்றம் மற்றும் டியூட்டிரியத்தின் அளவு இணைந்து பனிக்கட்டிகளைக் கொடுக்கும் என்று தெரியவந்தது. இந்த பனிக்கட்டிகளின் பண்புகள் விண்மீன்களுக்கு இடையேயுள்ள பனிக்கட்டிகளின் பண்புகளுடன் ஒத்திருப்பது மற்றுமொரு அதிசயம்தான். ஆனால் இது எந்த வெப்பநிலை மாற்றத்தினால் ஏற்பட்டிருக்கும், அப்போது அதில் எவ்வளவு டியூட்டிரியம் கலந்திருக்கும் என்று இன்றளவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் சூரியன் தோன்றும் முன்பே இந்தப் பனிக்கட்டிகள் இருந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட கூறுகிறார்கள். அப்படியானால் பூமியில் தற்போதிருக்கும் தண்ணீரின் வயது சூரியனை விட அதிகமாகத்தான் இருக்கும். இது எப்படி நண்பர்களே? நம்பவே முடியவில்லை அல்லவா? இது பற்றிய உங்கள் கருத்து என்ன? மேலும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் அபிப்பிராயத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Earth’s water is older than the sun


Water is one of the basic necessities for the survival of life on the Earth. We have estimated the origin of life on Earth based on water. Recent discovery points out that all the water present on the planets in our Solar family should have come from the glaciers in the space.

Water is also present on planets other than our Earth, but in frozen state. Depending on the time, they may become water. But no one knows where this water has come from. To find the truth, a research was started on the Hydrogen molecule of water in which the isotope of Hydrogen (Deuterium) was studied. It was found in the study that a specific thermal change and the presence of Deuterium result in formation of ice.

The surprising fact is that the physical properties of this ice are similar to that found in between the stars. But we are unable to find the specific thermal change that result in the ice formation and the amount of Deuterium present in it.

But Scientists strongly suggest that, these ice layers must have been formed before the existence of sun. So the water present on the Earth is older than the Sun. Isn’t it unbelievable? Post your comments about this Arivu dose below.


Davide Restivo | Creative Commons by-sa-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.