Natural Sciences Read in english

வானவியலில் சிறந்த சாண வண்டுகள்

By Niroshan Thillainathan on March 31st, 2015

Dung Beetles – Smart Astronomersஉங்கள் எல்லோருக்குமே சாண வண்டுகளைத் தெரியும் அல்லவா? ஆனால், இந்தச் சாண வண்டுகளுக்கும் வானியலுக்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்குத் தெரியுமா? இல்லை என்றால் கண்டிப்பாக இந்த அறிவு டோஸைப் படியுங்கள்!ன

நம்மைப் பொறுத்தவரையில் சாண வண்டுகள் ஒரு அருவருக்கத்தக்க வாழ்க்கையினை வாழும் பூச்சியினம் அவ்வளவுதான். அவை விலங்குகளின் கழிவுகளைச் சேகரித்து பந்து போன்று மாற்றி அதை தன் தேவைகளில் பலவற்றிற்குப் பயன்படுத்திக்கொள்ளும். அந்தச் சாண பந்துகளை அதன் வீடுகளாகவும், முட்டையிடும் இடமாகவும் அல்லது பசிக்கும் நேரத்தில் உணவாகவும்கூட உட்கொள்ளும். இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

அவை சாணத்தினை உருட்டிக்கொண்டு செல்லும்போது கவனித்துப் பாருங்கள் ஒரே நேர்கோட்டில் செல்லும். அதுவும் இரவு, பகல் என எதுவாக இருந்தாலும் அது உருட்டிச் செல்வது நேர்கோட்டில்தான் இருக்கும். இந்த வித்தியாசமான திறனைக் கவனித்த ஸ்வீடன் நாட்டின் லுன்ட் பல்கலைக்கழகத்தின் தாவரவியலாளரான மேரி டக்கே சோதனை ஒன்றை செய்தார். வான்கோள்கள் இருக்கும்படியான ஒரு அமைப்பினைக் கொண்ட அறையில் இந்தச் சாண வண்டினை வைத்து, அதன் நடவடிக்கைகளைக் கவனித்தார்.

அந்த வண்டின் பார்வையில் பார்த்தால் தான் இருப்பது ஒரு பால்வழி அண்டம் என்பதுபோல் அவர் அந்த அமைப்பினை ஏற்படுத்தியிருந்தார். தற்போதும் அந்தச் சாண வண்டுகள் ஒரே நேர்கோட்டில் உருட்டி செல்வதைக் காண முடிந்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் பார்த்தால் சாண வண்டுகள் மறுசுழற்சிக்கான பூச்சிகளாக மட்டுமல்லாமல் சிறந்த வானியல் அறிஞர்களாகவும் உள்ளன. இது வியப்பாக இல்லையா நண்பர்களே? இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? இது பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Dung Beetles – Smart Astronomers


All of us have heard about the Dung Beetles. But, do you know how they are related to Astronomy? If not, read this Arivu Dose and learn it.

According to us, Dung Beetles are insects which lead a disgusting life. They roll the animal dung into balls and use them for various purposes. They use the dung balls as their home, to lay eggs and even as their food when needed. Are you confused what is amazing in it?

When you look at the Beetles rolling the dung balls, you can observe that they roll them in a straight line. Irrespective of day or night, the rolling happens only in a straight line. Dr.Marie Dacke of Lund University, Sweden, has observed this peculiar featured and made a study. She placed the Dung Beetles in a room containing artificial planetary arrangements and observed their behaviour. She has designed the room in such a way that it appears as the Milky Way galaxy in the eyes of the Dung Beetle. She observed that the Dung Beetles rolled the Dung balls in a straight line even in this room. According to this study, these insects not only play an important role in recycling but also act as smart Astronomers.

Isn’t it surprising? Did you like this Arivu Dose? Post your comments about it below.


Rafael Brix | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.