Natural Sciences Read in english

உணர்ச்சிமிக்க அழுகைக்கும், வலியினால் வரும் அழுகைக்கும் வித்தியாசம் உண்டா?

By Niroshan Thillainathan on December 5th, 2014

Do emotional or pain induced tears differ?நாம் அழுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலான காரணங்கள் வெற்றி கிடைத்த மகிழ்ச்சி, வலி, பிறர் பிரிந்து செல்லுதல், வலுவிழந்த தன்மை போன்றவை தான். வேர்வை மற்றும் உமிழ்நீர் சுரப்பிகள் போல கண்ணீருக்கும் அழுகை சுரப்பிகள் என நமது கண்களில் உண்டு. உணர்ச்சியால் அழும்போதும், வலியால் அழும்போதும் இந்த சுரப்பிகள் ஒரே மாதிரிதான் செயல்படும்.

மற்ற சுரப்பிகள் போலவே இவையும் நமது இரத்த ஓட்டத்துடன் இணைந்துள்ளன. நமது கண்ணீரில் உள்ள ஒரு சில பொருட்கள் இரத்தத்திலிருந்து வருகின்றன. இந்த இரத்தத்தில் இருந்து பொருட்கள் கண்ணீரில் கலக்கும் விகிதம் சில ஹார்மோன்களினால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த ஹார்மோன்களின் செயல்பாடுதான் நாம் வலியினை உணரும் போதும், உணர்ச்சியில் அழும்போதும் என வெவ்வேறாக இருக்கிறது. எனவே நாம் அழும் நிலைகள் வெவ்வேறானது தான்.

30 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அமெரிக்க ஆராய்ச்சியாளர் உணர்ச்சிமிக்க அழுகை மற்றும் சாதாரண வெங்காயத்தினால் ஏற்படும் அழுகை என இரண்டு அழுகைகளிலும் கிடைத்த கண்ணீரை ஆராய்ந்தார். இதில் உணர்ச்சிமிக்க அழுகையில் கிடைத்த கண்ணீரில் புரதங்கள் அதிகம் என்பது கண்டறியப்பட்டது.

எனவே, நமது கண்ணீரில் கூட வெவ்வேறு விதங்கள் உள்ளன என்பதை நீங்கள் இந்த அறிவு டோஸ் ஊடாக அறிந்து கொண்டீர்கள், அல்லவா? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன? அதைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Do emotional or pain induced tears differ?


There may be many reasons behind our tears. Happiness caused by victory, pain, farewells and feeling weak, are the major reasons. Similar to sweat glands and salivary glands, tears are produced from lachrymal glands in our eyes. They function in the same way when we cry because of emotion or pain.

Similar to other glands, they are also connected to our blood circulation. Few components in our tears come from blood and the diffusion of these substances from blood to tears is regulated by hormones. The functions of these hormones vary when we perceive pain and when we cry emotionally.

30 years before, a scientist analysed the tear drops from crying due to emotion and by onion. It was found that the teardrops from emotion induced crying had high protein content. I hope this Arivu Dose would have made you aware about the difference in our tear drops. Post your comments about this Arivu Dose below.


Reji Jacob | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.