Earth & Environment Read in english

போரில் இறப்பவர்களை விட சுத்தமற்ற தண்ணீரால் அதிகமானோர் இறக்கின்றனர்

By Niroshan Thillainathan on September 24th, 2014

போரில் இறப்பவர்களை விட சுத்தமற்ற தண்ணீரால் அதிகமானோர் இறக்கின்றனர்உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கில் உள்ளோர்க்கு போதுமான அளவு பாதுகாப்பான குடிநீரும், இதர வசதிகளும் இல்லை. இது அவ்வளவு அதிர்ச்சித் தரும் விஷயமாக இருக்காது, ஏனென்றால் நாம் சாதாரண வாழ்க்கையிலே இதனைக் காண்கிறோம். இதன் உள்ளர்த்தம் என்னவென்றால், இத்தகைய மக்களுக்குத் தொற்றக்கூடிய நோய்களான காலரா, அர்செனிகோசிஸ், மலேரியா, ஃப்ளோரோசிஸ் மற்றும் பிற அபாயகரமான நோய்கள் வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன என்பது தான்.

இது போன்ற நீரின் மூலம் பரவும் நோய்களினால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் மூன்று மில்லியன் மக்கள் இறக்கின்றனர் என்றால், கற்பனை செய்துபாருங்கள். இது ஒருபுறம் அதிர்ச்சியளித்தாலும், இத்தகைய துப்பரவான வசதிகள் இல்லாமல் பாதிக்கப்படுவதில் வளர்ந்து வரும் நாடுகள் முக்கியமாக தெற்காசிய நாடுகள் முதலிடத்தில் உள்ளது, எனும் செய்தி மேலும் அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற இறப்புகள் ஏற்படுவதில், சுத்தமற்ற தண்ணீரால் ஏற்படும் குழந்தைகளின் இறப்புகள், தரவரிசையில் இரண்டாவது இடமாக உள்ளது.

இதை வைத்துப் பார்க்கும்போது, ஒரு போரினால் இறப்பவர்களை விட அதிகமானோர் சுகாதாரமான வசதிகள் இல்லாமல் இறக்கின்றனர் என்று தான் கூற வேண்டும். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன நண்பர்களே? அதைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Dirty Water kills more People than War


Approximately one third of world population has no access to clean water and other basic needs. This is not a new fact for many of us, because we are constantly witnessing the suffering of some people without proper basic needs. These unfortunate people are prone to many infectious water related diseases such as cholera, arsenicosis, malaria and fluorosis. These types of waterborne diseases kill about three million people each year, and South Asian countries are experiencing such sad situations at a higher rate. Children are especially vulnerable to unsafe water, making their death rate due to consumption of unsafe water to increase every year. In short, diseases from unsafe water and lack of basic sanitation kill more people every year, than all forms of violence, including war.

What do you think about this sad situation in our world? I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Bob Metcalf | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

7 Comments

 • Gokul Rock - 09/25/2014, 12:38 PM

  Antha nadukaluku nithi uthavi seiya vendum

 • Fayas Ahamed - 09/25/2014, 6:04 AM

  சுற்றுபுற சுகாதரத்தை பொறுத்தவரை நம் நாடு மிகவும் பின் தங்கி உள்ளது.

  வீடுகளில் கழிப்பறை வசதி கூட இல்லாமல் வாழும் குடும்பங்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன.

  தேங்கும் கழிவுநீரை முறையாக வெளியேற்றாமல் தேக்கம் செய்து அதை ஒரு ஆறாக மாற்றிய பெருமையும் நமக்கு உண்டு.

  ஏன் அன்றாட உணவை கூட சாலையோரங்களில் சமைத்து சாப்பிடும் குடும்பங்களும் இங்கு தான் உண்டு.

  நமது வீடுகளில் நவீன வசதி கொண்ட கழிப்பறைகள் உண்டா! என என்னால் கூற முடியாது.

  ஆனால் நவீன வசதி கொண்ட கைபேசிகள் ஒவ்வொரு வீட்டிலும் உண்டு என என்னால் உறுதியாக கூற முடியும்.

 • Chandran Narayanasamy - 09/25/2014, 12:29 AM

  நமக்குபின் வரும் சந்ததியினரருக்கு நாம் என்ன வைத்து விட்டு போகின்றோம்?????????????

 • Subu Mani - 09/24/2014, 8:01 PM

  Modi also say same

 • Siva Suji - 09/24/2014, 7:49 PM

  omygod

 • Shanmugakumar Balaganapathy - 09/24/2014, 7:02 PM

  very sad

 • Prasath Rock - 09/24/2014, 6:02 PM

  காடுகளை அழித்த நாடுகள் எல்லாம் தன்னால் அழியும்.