Behavioural Sciences Read in english

சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசங்கள்

By Niroshan Thillainathan on May 4th, 2014

சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசங்கள்அண்மையில் இலண்டன் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் சிலர் 12 வயதிற்கும் கீழ்ப்பட்ட சிறுவர்களுக்குப் பெரியவர்களைப் போல் பல்வேறு உணர்ச்சி தகவல்களை இணைக்கும் திறன் இல்லை என்பதைத் தங்களின் ஆராய்சிகளின் மூலம் உலகிற்கு அறியப்படுத்தியுள்ளனர். பல்வேறு உணர்ச்சிகளை இணைக்கும் திறன் என அவர்கள் குறிப்பிடுவது பார்வை, ஒலி ஆகியவை மட்டுமில்லாமல், மூளையைச் சென்றடையும் அனைத்து வெவ்வேறு தகவல்களையும் சேர்த்துத் தான் குறிப்பிட்டுள்ளனர். உதாரணத்திற்கு, கண்ணெதிரே நடக்கும் ஒரு சம்பவத்தைக் காணும் குழந்தையால், அச்சம்பவத்தைக் காண மட்டுமே தவிர அதனைக் கிரகித்துக் கொள்ள இயலாது. குழந்தைகளின் இரண்டு கண்கள் மூளைக்கு அனுப்பும் வெவ்வேறு தகவல்களை ஒருங்கிணைக்கும் திறன் கூட இல்லை என்பதை அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே, குழந்தைகளால் நம்மைப் போன்று உலகில் நடப்பவற்றை உணர முடியாது என இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைமை விஞ்ஞானி டாக்டர் மார்கோ நர்டினி கூறியுள்ளார். குழந்தைகள் வளர வளர அவர்களின் மூளை வளர்ச்சியடைந்து, பின்னர் படிப்படியாகக் கிரகித்துக் கொள்ளும் திறனை பெறுவர் எனவும், 12 வயதைத் தாண்டியவுடன் தான் அவர்களால் முழுமையாக இத்திறனைப் பெற முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே, சிறுவர்களுடன் பேசும் போது இவ்விடயத்தை எப்போதும் நினைவில் வைத்திருங்கள் நண்பர்களே! இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Differences between children and adults


In a recent study, the scientists in London University have proved that children under 12 years of age do not have the ability to coordinate various sensory inputs as adults do. When they say sensory information, it not only means visual and auditory inputs but also various other information that reach the brain. For example, when a child sees something, it just perceives what it sees but does not understand it. The brain of children doesnot coordinates the information relayed by both the eyes to the brain. Thus Dr. Marco Nartini, the head of this scientific team, says that children cannot feel everything happening in the world like adults do. He also says that, their understanding ability develops gradually along with the growth of the brain. Thus they attain the full ability to understand things only after the age of 12.

Keep this information in mind when you speak with kids. Post your comments below.


Sumanth Garakarajula | Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

2 Comments

  • Thanusan Sellathurai - 05/04/2014, 3:27 PM

    Better be under 12 I like it…. Too much headache now

  • Gowtham Rmg - 05/04/2014, 3:12 PM

    Nice