Natural Sciences Read in english

ஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா?

By Niroshan Thillainathan on March 23rd, 2015

Did turtles live with the dinosaurs?ஆமைகள் அதிக காலம் வாழும் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் ஆகும். ஆனால் அவை டைனோசர் வாழ்ந்த காலத்தில் கூட இருந்திருக்கக்கூடுமா? ஆம், நிச்சயமாக! ஆமைகள் டைனோசர் வாழ்ந்த காலகட்டங்களிலும் வாழ்ந்துள்ளன. இன்றைய அறிவு டோஸில் நான் உங்களுக்கு ஆமைகள் பற்றி தெரியாத சில சுவாரசியங்களை அறியத் தருகிறேன், படிக்கின்றீர்களா?

டைனோசர்கள் வெறும் 65 மில்லியன் வருடங்கள் மட்டுமே பழமையானது, ஆனால் ஆமைகளைப் பற்றிய படிமங்கள் சுமார் 150 மில்லியன் வருடங்கள் பழமையானது என்று குறிப்பிடுகிறது. சில கடல் ஆமைகள் ஆண்டிற்கு சுமார் 10,000 மைல்கள் பயணிக்கும் தன்மை கொண்டது. பெண் ஆமைகள் மணலைத் தோண்டி அதில் முட்டைகளை இடும். கடல் ஆமைகள் ஏறக்குறைய ஐந்தாண்டுகள் மூச்சினை அடக்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. ஆனால் உணவிற்காக நீரில் செல்லும் போது வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே மூச்சினை அடக்கிக்கொள்ளும்.

கடல் ஆமைகள் சுமார் 2000 பவுண்ட் எடை வரை வளரக்கூடியவை. ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று வருடங்களிலும் பெண் கடல் ஆமைகள் 150 முட்டைகள் வரை இடும். ஆனால் அனைத்து முட்டைகளிலுள்ள ஆமைகளும் சரியாக வளர்ந்துவிடாது. ஆயிரத்தில் ஒரு முட்டை மட்டுமே வெற்றிகரமாக வளர்ந்துவரும். ஆண் ஆமைகள் பெரும்பாலான வேளைகளில் கடலிலே பொழுதினைக் கழித்துவிடும். கடல் ஆமைகள் அழுவதில்லை, ஆனால் அதன் கண்களில் உள்ள சுரப்பிகள் தேவையற்ற அதிகப்படியான உப்புக்களை வெளியேற்றும், அதைப் பார்ப்பதற்கு அழுவதுபோல் தோன்றும்.

முட்டையிலிருக்கும் ஆமைகள் ஆணாவதும், பெண்ணாவதும் அடைக்காக்கும் வெப்பநிலையினை பொறுத்தே அமைகிறது. ஆனால் இதில் வருத்தத்திற்குரிய உண்மை என்ன தெரியுமா? ஏழு ஆமைகளில் ஆறு ஆமைகள் மனிதனின் செயல்களால் இறந்துவிடுகின்றன என்பது தான்.

சரி ஆமைகள் பற்றி ஓர் சில சுவாரசியமான விஷயங்கள் கூறினேன். இது போன்று உங்களுக்கும் ஆமைகள் பற்றி ஏதும் சுவாரசியமான தகவல் தெரியுமா? அப்படித் தெரிந்தால், அதைக் கண்டிப்பாக எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். மேலும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே!


English Version

Did turtles live with the dinosaurs?


All of us know that the Turtles have a very long life span. Is it possible for them to have lived during the Ages of Dinosaurs? Yes, Absolutely! Turtles have lived in the period of Dinosaurs. Let me give you some interesting facts about the Turtles in this Arivu Dose.

Dinosaurs are just 65 million years old species. But some of the fossils of Turtles date back to about 150 million years. Some Turtles have the habit of travelling about 10,000 miles per year. The female turtles dig holes in the sand and lay their eggs in them. Turtles have the ability to hold their breath for 5 years. But, when they go under water in search of food, they hold their breath only for 10 minutes.

Turtles can grow to a weight of 2000 pounds. Female turtles lay about 150 eggs every 2 or 3 years. But not all the eggs hatch successfully. Only one in thousand hatches successfully. Male turtles spend most of their lives in the sea. Although Turtles never cry, the gland in their eyes expels the unwanted salt through the eyes which appears like tears.

The sex of the Turtle is determined according to the temperature in which the eggs are maintained. The saddest truth is that 6 out of 7 Turtles die due to human activities.

I have shared some of the amazing facts about these wonderful creatures. If you can add up something to it, please do share it with us. Post your comments about this Arivu Dose below.


Brocken Inaglory | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

1 Comments

  • ramanujam - 03/24/2015, 6:27 AM

    அறியாத தகவல் அறியத் தந்தீர்! நன்றி!