Technology Read in english

மூளையின் செயல்பாட்டினை மாற்றும் புதிய மருத்துவம்

By Niroshan Thillainathan on November 25th, 2014

மூளையின் செயல்பாட்டினை மாற்றும் புதிய மருத்துவம்மூளையின் ஒருங்கிணைப்பினை மின் காந்தத் தூண்டலின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என தற்போதைய ஆய்வில் மேற்கு ஆஸ்திரேலியாவினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவர்கள் பலம் குறைந்த தொடர் மின் காந்தத் துடிப்புகளின் உதவியால் எலிகளைச் சோதனை செய்தனர். அதில் எலிகளின் அசாதாரண நரம்பு இணைப்புகள் கூட சாதாரண நரம்பு இணைப்புகளாக மாற்றப்பட்டதைக் கண்டறிந்தனர்.

நரம்பு அமைப்புகளில் மாற்றுத்திறன் உடையவர்களை இந்த ஆராய்ச்சியின் மூலம் சரிசெய்ய இயலும். மேலும் மூளையின் செயல்பாட்டினை மேம்படுத்தவும் இதனை பயன்படுத்த இயலும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது சரியாக வேலை செய்யாமல் உள்ள மூளையின் அசாதாரணப் பகுதிகளைக்கூட இந்த மின் காந்தத் தூண்டலின் மூலம் சாதாரணமாக மாற்ற இயலும். அத்துடன் எலிகளிடம் செய்த சோதனை வெற்றி பெற்றதால், இவை மனிதனுக்கு சிறிய பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் குறைவாகத்தான் இருக்கும் என அவர்கள் கணித்துள்ளனர்.

செயல்படாமல் இருக்கும் மூளையினைக் கூட செயல்பட வைக்கும் இந்த தொழில்நுட்ப மருத்துவம் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லையா? இது பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Could your brain be reprogrammed to work better?


A recent research conducted by the West Australian scientists has revealed that it is possible to control the coordination of the brain using electromagnetic stimulation. They have tested this technique in mice using low energy continuous electromagnetic impulses in which they found that the abnormal nerve junctions were converted to normal nerve junctions.

Through this research, it is possible to treat people with disability in the nervous system. Scientists also say that, this research can help to improve the brain functions. This electromagnetic stimulation can make the abnormal parts in brain to function normally. They have estimated that the side effects by this technique should be minimal as the experiment has been successful in mice.

Isn’t it amazing how technology can make an abnormal brain to function? Post your comments about it here.


Christian R. Linder | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.