Natural Sciences Read in english

விக்கல் ஏற்படக் காரணம் என்ன

By Niroshan Thillainathan on June 28th, 2014

விக்கல் ஏற்படக் காரணம் என்னநண்பர்களே, நமக்கு விக்கல் ஏற்படக் காரணம் என்னவென்று தெரியுமா? விக்கல்களுக்கான காரணங்கள் உடலமைப்பினைப் பொறுத்து மாறுபடும். முந்திய காலங்களில் அதிகப்படியான கோபம் கொள்பவர்களுக்கு விக்கல் வரும் எனக் கிரேக்கர்களால் நம்பப்பட்டது. ஆனால், தற்போதைய மருத்துவத்தின்படி மார்பு மற்றும் அடிவயிற்றுக்கு இடைப்பட்ட சதைப்பகுதியில் செயல்படும் காற்றால் விக்கல் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. குரல்வளையில் திடீரென ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் விக்கலாக வெளிவருகிறது. அதனால் தான் நம் மூச்சுப்பாதைகளில் ஒன்றான வாயின் வழியே வரும் காற்றினை இடையூறு செய்து “ஹிக், ஹிக்” என்ற வித்தியாசமான சத்தத்துடன் வருகிறது.

சரி, இனி விக்கலை எது குணப்படுத்தும் என்று பார்ப்போமா? விக்கல் குறைவது கூட ஒவ்வொருவரின் உடலமைப்பினைப் பொறுத்து மாறுபடுகிறது. விக்கலை வெற்றிகொள்ளும் அளவுக்கான மற்றொரு அதிர்ச்சியூட்டும் செயல்கள் ஒரு வழி ஆகும். இவ்வாறு அதிர்ச்சியூட்டும் பொழுது வேகஸ் நரம்பு என அழைக்கப்படும் ஒரு நரம்பு ஊக்குவிக்கப் படுகிறது. இதன் மூலம் வயிற்றுக்கும் மார்புக்கும் இடையேயுள்ள நரம்புகளின் கவனத்தினைத் திசைதிருப்பி விக்கலை நிறுத்தலாம்.

மற்றொரு முறை விக்கலின் போது சுவாசிப்பதை நிறுத்துவது ஆகும். இதனால் இரத்தத்திலுள்ள கார்பன்டை ஆக்ஸைடின் அளவு அதிகரிக்கும். தொடர்ந்து இதைச் சரிசெய்ய நமது உடல் திசை திருப்பப்படுவதால் விக்கல் நின்றுவிடும். சில வேளைகளில் விக்கலைக் கட்டுப்படுத்தத் தண்ணீரும் பயன்படுத்தப்படும். இதைத் தவிர்த்து இன்னுமொரு வழி, ஒரு தேக்கரண்டி சீனி அல்லது சர்க்கரை சாப்பிடுவது ஆகும். இவ்வாறு சாப்பிடும் போது, மேற்குறித்த வேகஸ் நரம்பு தூண்டப்பட்டு நமது உடல் விக்கலை மறந்துவிடுகிறது.

எனக்கு விக்கல் வரும் போது பொதுவாக நான் எப்போதும் எனது சுவாசத்தை நிறுத்திவிட்டு விக்கலை குணப்படுத்திவிடுவேன். உங்களுக்கு விக்கல் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள், நண்பர்களே? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Causes and treatments for hiccups


Hi friends! Do you know why we get hiccoughs? The reason depends on the physique of a person. In the Ancient times, Greeks believed that, only angry people get hiccoughs. But recent medical science says that hiccoughs happen because of the air which is present in the tissue between the chest and the abdomen. The sudden pressure in the vocal cord comes out as hiccoughs. This is the reason why the air that comes out of our mouth gets interrupted and an abnormal sound like “hick hick” is heard during a hiccough.

Let us learn how to treat hiccoughs. Getting relieved from hiccoughs also depends on one’s physical characteristic. One of the methods is to do any shocking thing. When someone is shocked or surprised, their Vagus nerve gets stimulated. In this way, the nerve impulse can be diverted from the stomach and stop the hiccoughs.

Another method is to stop breathing. This leads to accumulation of carbon dioxide in the blood. As our body functions get diverted to correct it, the hiccough stops. Sometimes drinking water is used to stop it. Another method is to have a spoonful of sugar which also leads to stimulation of Vagus nerve.

Whenever I have hiccoughs, I hold my breath and get relieved. What do you do when you have hiccoughs? Post your comments here.


Uwe Hermann (http://hermann-uwe.de/photoblog/sugar) | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

20 Comments

 • poomuthu ganesan - 11/15/2014, 4:22 PM

  I will stop breathing one min or drink water

 • Pasumlai - 07/19/2014, 10:37 AM

  சுவாசத்தை கட்டுபடுத்துவதன் மூலமும் தண்ணீர் குடிப்பதன் மூலமும் விக்கலை நிறுத்த முடியும்.

 • Niroshan Thillainathan
  Niroshan Thillainathan - 07/04/2014, 10:21 AM

  நண்பர்களே, உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி Ra Ni Thasan Farlin Asharaff Siva Kumar Nadaraj Farzan Mohamed Kathirdhanusri Kathir Amalraj Ravi Chandra Sekar Viswa Nathan Don Vignesh Ravi Top Arunvel Arun Raj Muthu Sandal Wood Aravindha Viru Manoj Mano Mahesh Kumar Gánésh Jaï

 • Siva Kumar Nadaraj - 07/02/2014, 1:15 AM

  water

 • Farzan Mohamed - 06/30/2014, 1:03 PM

  http://en.m.wikipedia.org/wiki/Hiccup

 • Kathirdhanusri Kathir - 06/30/2014, 12:42 PM

  Suger

 • Amalraj Ravi - 06/30/2014, 12:13 PM

  Take a spoon of sugar really works

 • Chandra Sekar - 06/30/2014, 12:09 PM

  Water

 • Viswa Nathan - 06/30/2014, 8:33 AM

  I will drink water

 • Don Vignesh - 06/30/2014, 5:51 AM

  Water

 • Ravi Top - 06/29/2014, 6:38 PM

  Same

 • Arunvel Arun - 06/29/2014, 4:54 PM

  Nice information

 • Ra Ni Thasan - 06/29/2014, 12:53 AM

  Vikkuven

 • Raj Muthu - 06/28/2014, 10:56 PM

  Same

 • Sandal Wood - 06/28/2014, 9:48 PM

  Same as you!

 • Aravindha Viru - 06/28/2014, 6:54 PM

  Water

 • Farlin Asharaff - 06/28/2014, 6:39 PM

  it is the sudden closure of the epiglottis due to the involuntary contraction of diaphragm Nithiya Saraswathi sari thaaney sarasu ?

 • Manoj Mano - 06/28/2014, 6:27 PM

  Ssame

 • Mahesh Kumar - 06/28/2014, 3:23 PM

  neraya thanni kudipen bt pogave seyathu

 • Gánésh Jaï - 06/28/2014, 1:31 PM

  Only water ……