Behavioural Sciences Read in english

மன அழுத்தம் என்றால் என்ன

By Niroshan Thillainathan on February 12th, 2014

மன அழுத்தம் என்றால் என்னநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன். எனவே கட்டாயம் படித்துப் பாருங்கள்!

நாம் இருக்கும் இந்த பிஸியான உலகில் stress எனப்படும் மன அழுத்தம் எங்கள் வாழ்வில் சாதாரண ஒரு விடயம் ஆகிவிட்டது. கடன், வேலையின்மை, குடும்பத்தில் பிரச்சினைகள், பள்ளியில் பரீட்சை போன்றவற்றை நமக்கு மன அழுத்தத்தை தருகின்றது. ஆனால், இந்த மன அழுத்தம் நம்மையும் நமது உடலையும் பாதிக்கின்றது என்பது தெரியுமா? ஏன்… இதனால் நமது உயிருக்கே ஆபத்து இருக்கின்றது என்று தெரியுமா?

உயிரியல் ரீதியாக மன அழுத்தம் சில வேளைகளில் மிகவும் உபயோகமாக இருக்கும். நீங்கள் ஒரு காட்டில் நடந்து செல்லும் போது ஒரு கரடி உங்களைத் தாக்கினால், உங்கள் உடல் ஒரு விதமான அழுத்த நிலையை அடைந்துவிடும். உங்கள் இருதயம் வேகமாக துடித்து, தசைகள் இறுகி அந்த இடத்தை விட்டு உடனடியாக போவதற்கு உங்கள் உடல் தயாராகிவிடும்! ஆகவே, இப்படி ஆபத்தான நேரங்களில் மன அழுத்தம் நமது உயிரைக் காப்பாற்றுகிறது.

ஆனால், இதே மன அழுத்தம் தினசரி வாழ்க்கையில் வந்தால், அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஜப்பானில் இதற்கு Karoshi என்று கூட பெயர் வைத்திருக்கிறார்கள். இதன் நேரடி மொழிபெயர்ப்பு „அதிக வேலைப்பளு மரணம்“ ஆகும். மிகவும் ஆரோக்கியமானவர்கள் என்று கருதப்பட்டவர்கள் திடீரென்று மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற நோய்கள் காரணமாக இறந்து விடுகிறார்கள். இதை அவதானித்தவர்கள் இந்த நோய்களுக்கும் மன அழுத்தத்திற்கும் தொடர்பு இருக்கின்றது என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

சரி, மன அழுத்தம் இருக்கும் போது உண்மையில் நமது உடலில் என்ன தான் நடக்கிறது? பொதுவாக Cortisol எனப்படும் இயக்குநீர் (hormon) தான் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி உடலின் எந்த உறுப்புகளுக்கு சக்தி தேவையோ அந்த இடங்களுக்கு சக்தியை அனுப்ப உதவுகிறது. ஆனால், மன அழுத்தம் தொடர்ந்திருந்தால் அதனால் பல பிரச்சினைகள் ஆரம்பித்துவிடும். மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு முற்றிலும் தனது பணியை நிறுத்திவிடும், அத்துடன் வெண்குறுதியணுக்களின் (white blood cells) எண்ணிக்கை குறைந்துவிடும், மேலும் நோய்கள் வருவதன் வாய்ப்பு அதிகரித்துவிடும். ஏன், புற்றுநோய் வருவதற்குக் கூட வாய்ப்புகள் இருக்கின்றது என்று கூறப்படுகிறது.

அது மட்டும் இல்லை… நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு உயிரணுவிலும் அடங்கி இருக்கும் ஒவ்வொரு நிறப்புரியின் (chromosome) நுனியிலும் telomeres எனப்படும் ஒரு பகுதி இணைந்திருக்கிறது. இந்த telomeresஇன் அளவு வயது போகப் போகக் குறைந்துகொண்டே போய் ஒரு கட்டத்தில் முற்றிலும் நீங்கி விடும். அத்துடன் அந்த உயிரணுவும் இறந்துவிடும்… ஆகவே அந்த telomeres இல்லாமல் போகும்போது நாமும் இறந்து விடுகிறோம். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், மன அழுத்தத்திற்கும் இந்த telomeresஇன் அளவு குறைவதற்கும் தொடர்பு இருக்கிறது. அழுத்தம் கூடக் கூட telomeresஇன் அளவு குறைவதின் வேகமும் அதிகரித்து விடுகிறது. ஆகவே, நாம் மரணத்தை நோக்கி வேகமாகச் செல்கிறோம்!

ஆனால், பயப்படாதீர்கள்! மன அழுத்தம் உருவாக்குவதற்கு ஒரு இயக்குநீர் இருக்கிறது என்றால், அதைக் குறைப்பதற்கும் ஒரு இயக்குநீர் இருக்கத் தானே வேண்டும்! அது வேறு ஒன்றுமே இல்லை, காதல், அன்பு, சந்தோஷம் போன்ற உணர்வுகளுக்கும் காரணமாக இருக்கும் Oxytocin எனும் இயக்குநீர் தான். ஆகவே, மன அழுத்தம் உள்ள நேரம் நீங்கள் உங்களுக்குப் பிடித்தவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள், அத்துடன் மன அழுத்தமும் குறைந்து நீண்ட காலம் உயிர் வாழலாம்!

இனி நீங்கள் கூறுங்கள் நண்பர்களே, உங்களுக்கு மன அழுத்தம் இருக்கும் பொழுது என்ன செய்வீர்கள்? உங்கள் பதிலையும் மேலும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Causes and Effects of Stress


In this busy world, stress has become a common issue. Things like family issues, exams and unemployment cause stress. Do you know that stress affects our body and mind? It may even be dangerous to our life!

Biologically stress can be very useful at times. When a grizzly bear attacks you in a forest, your body gets stressed. Your heart beats faster and the muscles contract and make your body ready to flee. So this stress saves your life. But the mental stress in the daily life will cause serious damage. It is called Karoshi in Japan which literally means high work load death. Healthy people get affected by heart attack and stroke resulting in sudden death. Researchers have found that there is a strong relationship between these diseases and mental stress.

Let us see what happens in our body in stressful situation? Cortisol is a hormone which controls the stress and diverts the energy to the organs, which are in need of it. When stress continues, the immune system fails to function, the white blood cell decreases in number and there will be increased incidence of diseases, even deadly ones like cancer. Also, the chromosome present in each cell of our body has a part called telomere at its ends. As one ages, the telomeres shortens and disappear eventually and the cell dies. The important thing to be noted here is that there is a relation between stress and the telomere shortening. Telomere shortening occurs faster as stress increases. So, we are rushing towards death. But don’t fear. Isn’t it obvious that if there is a chemical causing stress, there has to be a chemical to reduce it? It is nothing but oxytocin which is responsible for pleasure and love. So, spend your stressful time with people you love and live for a longer time.

How do you get relieved from stress? I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Abie Sudiono | Creative Commons by-2.0, via Wikimedia Commons, changes were made.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

47 Comments

 • Niroshan Thillainathan
  Niroshan Thillainathan - 07/28/2014, 12:32 PM

  உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி, நண்பர்களே Rohan Sanker Rumesh Rumesh Murugangan Gan Gánésh Jaï Shanmuga Raja Vel Vel Afrose Nisha Gowtham Subrayan Dharsan King Bennythomas Kolambarath Johan Sajeev Barath Roshan Prabha Karan Kathti Mani Kathti Mani Ganesh Ganesh Naga Ranga Ramesh Movenderan Suresh Vishwa Sajin Raj S Arun P Bala Mugam Pandiyan Pandi Pandiyan Pandi Navas Khan Raja Vijin Satheesh Kumar Jegan Ijk Vijay Parthipan Syed Ibrahim Ahsan Ahmad Nagarajan Naga Fasmin Jaafar Theenu Theena Zoya Yasmin Mugunthan Kailasapillai Mujeeb Rasthaa Vignesh Waran Aruna Alpha Kader Khani Sha Sha Rama Chandran Madhan Saravanan Muthu Rajan Siva Prakash Arul Kannan Saravan Sun Jhansi Njlrani Sundaram Dinakaran

 • Afrose Nisha - 07/24/2014, 8:30 PM

  Realy true

 • Gowtham Subrayan - 07/24/2014, 5:06 PM

  Very nice .thank u brother

 • Dharsan King - 07/23/2014, 9:28 PM

  Thanks for this information..

 • Bennythomas Kolambarath - 07/23/2014, 8:44 PM

  Love Pannalam

 • Johan Sajeev - 07/23/2014, 8:10 PM

  Super niroshan ur great keep it up

 • Prabha Karan - 07/23/2014, 7:16 PM

  Good

 • Kathti Mani Kathti Mani - 07/23/2014, 5:21 PM

  Enda epadi pathara

 • Ganesh Ganesh - 07/23/2014, 5:12 PM

  Oruthar mela adhiga paasam vatcha idhellam kandippa varum nga

 • Naga Ranga - 07/23/2014, 5:02 PM

  Good. Message …thank s

 • Ramesh Movenderan - 07/23/2014, 4:01 PM

  Is

 • Suresh Vishwa - 07/23/2014, 3:48 PM

  Don’t worry about anything

 • Sundaram Dinakaran - 07/23/2014, 3:18 PM

  உடற்செயலியல் குறித்த புரிதல் இப்பத்தியில் குறைவாய் இருக்கிறது என நினைக்கிறேன். Telomere க்கும் வயதுக்கும் சிறிய தொடர்பு உண்டென்பதை ஒத்துக்கொள்ளும் அதே சமயத்தில் மைட்டாசிஸ் பிரிதலின்போது DNA சிதைவடையாமல் தடுப்பதற்கென உள்ள பகுதியே telomere ஆனால் telomerase உற்பத்திக்குறைவு தான் telomere சிதைவுக்குக்காரணம். மனஅழுத்தத்திற்கான காரணிகள் பல. இருப்பினும் மேம்போக்கான புரிதலுக்கு இது போதும். விரிவாய் இருப்பது நலம்.

 • Sajin Raj S - 07/23/2014, 1:33 PM

  Nice my dr frd

 • Arun P - 07/23/2014, 12:27 PM

  முடிந்தவரை நம்முடன் இருப்பவர்கலிடம் அண்பாகவும் கணிவாகவும் இணிமையாண சொற்க்களைமட்டும் பயண்படுத்தி மகிழ்ய வைப்போம்

 • Pandiyan Pandi Pandiyan Pandi - 07/23/2014, 11:03 AM

  Nallathan irukku aana என் கிட்ட யாரும் சந்தோசமா ……….

 • Navas Khan - 07/23/2014, 11:01 AM

  you surrender to god it is best way to reduce stress

 • Raja Vijin - 07/23/2014, 10:44 AM

  When I fell stress I’m gonna talk with ma mum or ma L…. Bcaz I felt many times like same stress.

 • Satheesh Kumar - 07/23/2014, 10:41 AM

  fnds iruntha pressure irukathu..

 • Jegan Ijk - 07/23/2014, 10:16 AM

  Kovilukum pogalam

 • Rohan Sanker - 07/23/2014, 9:40 AM

  Thanks nanba

 • Murugangan Gan - 07/23/2014, 9:39 AM

  எல்லோரும் ஆங்கில எழுத்தில் கமண்ட் எழுதி என் மனஅழுத்தத்தை அதிகரிக்காதீங்கோ

 • Vijay Parthipan - 07/23/2014, 9:04 AM

  Super

 • Syed Ibrahim - 07/23/2014, 8:25 AM

  Useful message.

 • Ahsan Ahmad - 07/23/2014, 8:21 AM

  Thaaaaaaaaaanx