Natural Sciences Read in english

தொண்டையில் ஒரு கட்டி

By Niroshan Thillainathan on June 20th, 2014

தொண்டையில் ஒரு கட்டி நீங்கள் அழும்போதோ அல்லது உணர்ச்சி வசப்படும்போதோ உங்கள் தொண்டையில் ஒரு கட்டி இருப்பதைப் போன்று உணர்வது ஏன் என்று எப்போதாவது வியந்திருக்கிறீர்களா நண்பர்களே? இன்றைய அறிவு டோஸில் அதற்குரிய காரணத்தை உங்களுக்கு அறியத் தருகின்றேன்.

அது வேறு ஒன்றும் இல்லை, நீங்கள் ஒரு சோகமான திரைப்படம் பார்த்ததாலோ அல்லது உங்களின் மதிப்பெண் அட்டை பெற்றதன் காரணமாகவோ இருக்கலாம், அடிக்கடி அழுவது உங்களின் தொண்டையில் கட்டி ஏற்பட்டது போன்ற ஒரு உணர்வை உண்டாக்கலாம். இந்தக் கட்டி போன்ற உணர்வு, நரம்பு மண்டலம் எவ்வாறு மன அழுத்தத்தைக் கையாளுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது. மன அழுத்தத்தைக் கையாளும் நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி தன்னாட்சி நரம்பு மண்டலம் (Autonomic nervous system) எனப்படுகிறது.

மனிதன் வருத்தம் அல்லது துக்கம் போன்ற உணர்வுகளை அனுபவிக்கும்போது, தன்னாட்சி நரம்பு மண்டலம் உடல் முழுவதும் ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம், கோபம் அல்லது பயத்தை ஏற்படுத்தி எதிர்வினை புரிகிறது. ஆக்ஸிஜன் உட்கொள்ளலை அதிகரிக்க, தன்னாட்சி நரம்பு மண்டலம் நம்மை வேகமாக மூச்சிழுக்கச் செய்து, தொண்டையின் ஒரு பகுதியான குரல்வளையை விரிவடையச் செய்கிறது. விழுங்குதலின் போது குரல்வளை மூடுகிறது. எனவே, அழும்போது அல்லது உணர்ச்சிவசப்படும்போது நாம் விழுங்கும்போது, குரல்வளையைத் திறக்கும் தசைகளுக்கு எதிராக நாம் செயல்பட்டு, அதன் விளைவான தசை இழுவிசையைத் தொண்டையில் கட்டியாக நாம் உணர்கிறோம்.

என்ன சந்தேகம் தீர்ந்துவிட்டதா நண்பர்களே? இந்த அறிவு டோஸ் பிடித்ததா? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Cause of lump in throat feeling


Have you ever felt a mass like thing in your throat when you get emotional or cry? Let me explain the reason for it in this Arivu Dose.

It may be due to a sad movie or after receiving your report card. Crying frequently may cause tightness in the throat. This tightness depends on how our nervous system handles a stressful situation. One part of the nervous system that handles stressful situation is called Autonomic nervous system.

When a man feels sad or emotional, the autonomic nervous system reacts by increasing the oxygen supply and by creating anger or fear. To increase the intake of oxygen, the autonomic nervous system makes us to breathe in rapidly and widens the vocal cord. When we swallow, the vocal cords are closed. When we get emotional or cry, we swallow and act against the muscles that open the vocal cord. The resulting muscle tightness is felt as a mass in the throat.

Hope your doubt is clarified. Did you like this Arivu Dose? Post your comments below.


Crimfants (http://flickr.com/photos/crimfants/327861820/) | Creative Commons by-sa-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

10 Comments

  • Malar Vizhi - 06/23/2014, 9:15 AM

    Ada da ena oru vishyam

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 06/22/2014, 6:36 PM

    நண்பர்களே, உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நண்றி Samsu Raj Rajan J Rajan Afreen Ridha Sweetpondi Sweetpondi Akram Ala Princy Riya Kanda Vel

  • Kanda Vel - 06/22/2014, 1:35 PM

    Mm.super

  • Afreen Ridha - 06/22/2014, 8:34 AM

    Thnks

  • Sweetpondi Sweetpondi - 06/22/2014, 7:34 AM

    thanks

  • Akram Ala - 06/21/2014, 2:45 PM

    Nallathu arumai arumai

  • Antony Vincent Saga - 06/21/2014, 12:58 AM

    supar

  • Samsu Raj - 06/20/2014, 6:22 PM

    supar

  • Rajan J Rajan - 06/20/2014, 2:01 PM

    nice boss

  • Princy Riya - 06/20/2014, 1:11 PM

    nice