Future Sciences Read in english

தங்களுக்குள்ளே பேசிக்கொள்ளும் கார்கள்

By Niroshan Thillainathan on January 2nd, 2015

Cars that drive themselves starting to chat with each otherநமது கார் பழுதாகி நின்றுவிட்டால் என்ன செய்வோம்? மற்றொரு வாகனத்தினை உதவிக்கு கேட்டு அதன்மூலம் அங்கிருந்து இழுத்துச் செல்ல சொல்வோம். ஆனால் Acura RLX sedan புதிதாக ஒரு காரினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் இரு கார்களுக்கும் நடுவில் எந்த வித பொருள் தொடர்பும் இருக்காது. ஆனால் முதல் காரின் அறிவுரையின்படி பின்னால் செல்லும் இரண்டாவது கார் தானாகவே ஓட்டிக்கொள்ளும். இதில் உள்ள ஆச்சர்யம் என்ன்வென்றால், ஓட்டுநரின் பங்கு மிகவும் குறைவு என்பது தான்!

இரு கார்களிடம் அமைக்கப்பட்டுள்ள தொடர்பு சாதனங்கள் ஒன்றையொன்று தொடர்பு கொண்டு சாதாரணமாக செல்வது போலவே செல்லத் தொடங்கிவிடும். கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள தொழில்நுட்பம் சார்ந்த இந்த கண்டுபிடிப்புகள் விரைவாக வளர்ந்து வருகின்றன. இதனை வெளியிட்ட நிறுவனம், அடுத்த ஆண்டு முதல் ஒரு வாகனத்திற்கு 2000$ என்ற மதிப்பின் அடிப்படையில் வாகனங்கள் வெளிவிடப்படும் என அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் இதில் பல பிரச்சினைகளும் உள்ளன. ஒருவேளை தானாக செல்லக்கூடிய கார் விபத்தானால் அதன் சேதம் யாருடைய பொறுப்பு? இந்த வாகனங்கள் சாலை விதிகளை மதிக்குமா? இதன் பாதுகாப்பு அளவு எந்தமாதிரி இருக்கும்? இப்படிப் பல கேள்விகள் எழுந்துகொண்டே செல்கின்றன. இருப்பினும் வாடிக்கையாளர்களின் பெரும்பாலான தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் பல பொறியியலாளர்களும், விஞ்ஞானிகளும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கார் தானாக ஓடுகிறது என ஓட்டுநர்கள் தூங்கிவிட முடியாது, அவர்களை விழிப்புடன் வைக்கவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன நண்பர்களே? இப்படி ஓர் கார் நமக்கு நன்மையைத் தருமா, இல்லை தீமையைத் தருமா? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Cars that drive themselves starting to chat with each other


What would you do if your car broke down? You would probably tow it with another car. But Acura RLS Sedan has created a new car. There won’t be any physical contact between the two cars. But the second car will drive itself behind the first car according to its instructions. It is surprising to see that the part of the driver is very less in this situation.

With the help of the communication devices in both the cars, they begin to drive normally. This innovative technology which involves both Google and Apple is developing rapidly. The company has announced that these cars will be commercially available from next year for 2000$.

Although this is an amazing invention there are many practical problems. Who will be responsible if this automatic car meets with an accident? Will this car obeys traffic rules? What will be the level of safety? Although so many questions are yet to be answered, engineers and scientists are more involved in creating this car to fulfil man’s many needs. Although it’s an automatic car, the driver can’t sleep while driving and the necessary things have been done to take them awake.

Did you like this Arivu Dose? Post your comments about the advantages and disadvantages of this


Steve Jurvetson | Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.