Social Sciences Read in english

பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிட்டு புற்றுநோயை எதிர்ப்போம்

By Niroshan Thillainathan on June 18th, 2014

பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிட்டு புற்றுநோயை எதிர்ப்போம்அமெரிக்க மக்கள், தங்களது தினசரி சாப்பாட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் வருடத்திற்கு 20,000 புற்று நோயாளிகளைக் குறைக்க முடியும் என ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ஆனால், இந்த எண்ணிக்கை, பழங்கள் மற்றும் காய்கறிகளில் தங்கியிருக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொள்வதால் ஏற்படும் புற்றுநோய் எண்ணிக்கைக்கு எதிர்மறையாக உள்ளது. புற்றுநோய் அபாயங்கள் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை முறைகளை பயன்படுத்தி மதிப்பீடு செய்யப்பட்டது. மேலும், புற்றுநோய் வலிமையை, அமெரிக்க வேளாண் துறையின் பூச்சிக்கொல்லியின் அளவு குறித்த மாதிரி தரவை பயன்படுத்தி மதிப்பிடப்பட்டன.

இந்த ஆராய்ச்சியின் முடிவில், 20,000 புற்றுநோய் வழக்குகள் அதிகமாக பழம் மற்றும் காய்கறிகள் உட்கொள்வதால் தடுக்க முடியும் என்றும், கிட்டத்தட்ட 10 புற்றுநோய் வழக்குகள் பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள பூச்சிக்கொள்ளியை உட்கொள்வதால் ஏற்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நன்மை மற்றும் ஆபத்து மதிப்பீடுகளின் இடையே உள்ள பெரும் வேறுபாடு, நுகர்வோர் பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் புற்றுநோய் ஆபத்துக்களை பற்றி கவலை படத் தேவையில்லை என்று வெளிச்சம் போட்டு காட்டுகிறது.


English Version

Cancer preventing fruits and vegetables


A new research says that American people can reduce the incidence of cancer in 20,000 people per year by adding fruits and vegetables to their diet. But this statistics is contradicting the incidence of cancer that occurs due to consumption of fruits and vegetables along with the pesticides on them. The harmful effects of cancer was studied based on the United States Environment Protection Agency and the severity of cancer was estimated based on the Agriculture department’s sample data on quantity of pesticides used.

The research states that 20,000 cancer cases can be prevented by eating fruits and vegetables while 10 cancer cases can be caused by consuming the pesticides along with the fruits and vegetables. The comparison between the benefits and harm, in consuming fruits and vegetables prove that there is no need to worry about cancers on consuming fruits and vegetables.


Popolon | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.