Astronomy Read in english

உங்களால் நட்சத்திரத்தை தொட முடியுமா

By Niroshan Thillainathan on February 13th, 2014

உங்களால் நட்சத்திரத்தை தொட முடியுமாஉங்களால் நட்சத்திரம் ஒன்றைத் தொட முடியுமா? நான் சொல்வது சூப்பர் ஸ்டார் அல்லது அல்டிமேட் ஸ்டார் இல்லை! இவர்களைத் தொடுவது மிகவும் கடினம். நான் கேட்பது விண்மீன் மற்றும் நாள்மீன் என்றும் அழைக்கப்படும் விண்வெளியில் காணப்படும் நட்சத்திரத்தைத் தொட முடியுமா? நட்சத்திரம் என்ற உடனே நீங்கள் நமது சூரியனைத் தான் நினைத்து விடுவீர்கள். அந்தச் சூரியனின் வெப்பம் தெரிந்த உங்களுக்கு என் கேள்வி நகைச்சுவையாகத் தான் இருக்கும். இருந்தாலும் எனது கேள்விக்கு ஒரு அர்த்தம் இருக்கத் தான் செய்கிறது. ஏன் என்று இந்த அறிவு டோஸில் அறியத் தருகிறேன்.

நமக்கு மிகவும் பழக்கமான நட்சத்திரம் சூரியக் குடும்பத்தின் மையத்திலுள்ள நமது சூரியன் தான். நமது புவியில் இருந்து 149,6 மில்லியன் km தூரத்தில் இருக்கும் இந்தச் சூரியனின் மேற்பரப்பில் ஏறத்தாழ 5700 பாகை செல்சியசும், கருவில் 15 மில்லியன் பாகை செல்சியசுக்கும் அதிகமாக இருக்கின்றது. அடுப்பில் கொதித்த 100 பாகை செல்சியசு தண்ணீரைக் கூட நம்மால் தொட முடியவில்லையே, இவ்வாறு அதி வெப்பத்தைக் கொண்ட நட்சத்திரத்தை எப்படி நம்மால் தொட முடியும்?

இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், விண்வெளியில் காணப்படும் எல்லா நட்சத்திரங்களும் இவ்வாறு வெப்பமானவை அல்ல. NASAவின் தகவல்கள் படி விண்வெளியில் எவ்வளவோ வெப்பம் குறைந்த நட்சத்திரங்கள் உள்ளன. அப்படியான ஓர் நட்சத்திர வகை தான் பழுப்புக் குறுமீன் (brown dwarf star) அல்லது பழுப்புக் குள்ளன் என்று அழைக்கபடுகின்றது. நட்சத்திரங்களில் எரியாமல் போன விண்மீன் வகைகள் பழுப்புக் குறுமீன் வகையைச் சேர்ந்தன ஆகும்.

2010ம் ஆண்டில் NASA இவ்வாறான 14 பழுப்புக் குறுமீன்களைக் கண்டுபிடித்துள்ளது. அந்தக் குறுமீன்கள் அந்நேரம் வரை அறிந்த நட்சத்திரங்களில் மிகவும் வெப்பம் குறைந்த நட்சத்திரங்கள் ஆகும். பின் 2011இல் மேலும் 6 பழுப்புக் குறுமீன்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இவை 2010இல் கண்டுபிடித்த 14 பழுப்புக் குறுமீன்களை விட வெப்பம் குறைந்திருந்தன. அது மட்டும் அல்ல! அந்த 6 குறுமீன்களும் நமது உடல் வெப்பமான 37 பாகை செல்சியசு விட வெப்பம் குறைந்தன என்றால் நம்ப முடியுமா?

சரி, இப்போ சொல்லுங்கள். உங்களால் நட்சத்திரத்தை தொட முடியுமா? கட்டாயம் முடியும்! அதுவே ஓர் பழுப்புக் குறுமீனாக இருந்தால் அதைத் தொடுவதற்கு வாய்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. ஆனால் இதில் ஒரே ஒரு சிறிய பிரச்சினை தான் இருக்கிறது. இன்று வரை நமக்குத் தெரிந்த, அருகில் உள்ள Luhman 16 என்று அழைக்கப்படும் பழுப்புக் குறுமீன் புவியில் இருந்து 6,5 ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கிறது. 6.5 ஒளி ஆண்டுகள் என்றால் 61,495,200,000,000 km ஆகும். எனவே, அந்தப் பழுப்புக் குறுமீனை ஓர் ஏவூர்தியில் (rocket) சென்றடைய விரும்பினால் ஏறத்தாழ 252,194 வருடங்கள் பயனம் செய்தால் தான் முடியும்.

என்ன் நண்பர்களே, பயனத்துக்கு இப்பவே பெட்டி படுக்கை எல்லாம் எடுப்போமா…? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Can you touch a star?


Can you touch stars? I mean the stars in the outer space. When I say star immediately you would have thought about the sun and may find this question funny as you all know its temperature. Actually, my question is meaningful. Let me explain that in this Arivu Dose.

The star with which we are very familiar in our solar system is the sun. The sun which is 1496 million km away from the earth has the surface temperature of 5700 degree celcius and the core temperature of over 15 million degree celcius. When we are unable to touch the boiling water at 100 degree Celsius how can we touch a star which is so hot? What is surprising is that not all stars are hot. According to NASA, there are many stars with less temperature. One such star is the brown dwarf star. Stars which don’t burn anymore belong to brown dwarf stars.

In 2010, NASA discovered 14 such brown dwarf stars. They were the stars with lowest temperature known by then. Later in 2011, 6 more brown dwarf stars were discovered, which had temperatures lower than the old 14 dwarf stars. The interesting fact is that their temperature is less than our body temperature (37 degree Celsius).

Tell me now, can you touch a star? Yes, you can! It is highly possible with a brown dwarf star. The only problem is that, the nearest brown dwarf star Luhman 16 is 6.5 light years away from Earth. 6.5 light years is 61,495,200,000,000 km. We will be able to reach it in a rocket in 252,194 years. Are you ready for the journey?

Did you enjoy reading this Arivu Dose? Share your thoughts and opinions with me by dropping a comment below.


NASA | Public Domain

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

110 Comments

  • Siva Seelan - 08/12/2014, 4:09 PM

    Nan varala boss. …

  • Balaji Rahman - 08/09/2014, 8:12 AM

    super g

  • Singarayan Francis Jegan - 08/09/2014, 7:28 AM

    Super

  • Mani Veera - 08/09/2014, 7:16 AM

    Arumay etha athir parthen

  • Muthu Kumar - 08/09/2014, 6:17 AM

    ‘risku edukrathuna enaku rasku saptra mathiri”

  • Sri Thiru Sachin - 08/09/2014, 5:31 AM

    I m ready for tour

  • Eagle Eye - 08/09/2014, 4:32 AM

    பயணத்துக்கு நான் தயார் நண்பா

  • Geetha Balaji - 08/09/2014, 3:30 AM

    Nice msg

  • Antony Doss - 08/09/2014, 2:29 AM

    I ho pullarikkuthu poggal!!!!!

  • Billa Kumar - 08/08/2014, 8:26 PM

    Enapa intha kolaveri namba

  • Krishna Karna - 08/08/2014, 8:18 PM

    Nice brother

  • Mhm Mayeen - 08/08/2014, 7:30 PM

    Eatho jocking pora mathiri koopiduringa

  • Surya Tamil - 08/08/2014, 6:14 PM

    ரூம் போட்டு யோசிப்பாங்களோ

  • Shagul Hameed - 08/08/2014, 6:09 PM

    Mudiyathu

  • Eswara Moorthy - 08/08/2014, 6:08 PM

    Thanq 4 info

  • Partheeban Robeen Robin - 08/08/2014, 5:26 PM

    ok na redy buslaya poganu busuk tikket avalau

  • Prakash Panner - 08/08/2014, 4:30 PM

    Right science & nature aways beautiful

  • Nan Than Bala - 08/08/2014, 4:24 PM

    tks

  • Arjun Dhoni - 08/08/2014, 4:09 PM

    Neenga vijayakaanth fan’aa pulli vivarama solringa

  • Raj Billa - 08/08/2014, 3:46 PM

    நான் பெட்டி படுக்கை ரெடீ பன்னீடே

  • Mohamed Faa Ji - 08/08/2014, 3:28 PM

    Nice nice

  • Imran Gnaniyar - 08/08/2014, 2:32 PM

    Ithu ennathu pa

  • Bharathi Subramanian - 08/08/2014, 2:31 PM

    Thnk u frnd…

  • Amjath Khan - 08/08/2014, 12:51 PM

    Weldon job keep going

  • Ramachandran Jai - 08/08/2014, 12:25 PM

    Thank you