Science & Mystery Read in english

சீனப் பெருஞ்சுவரும் கட்டுக்கதையும்

By Niroshan Thillainathan on March 31st, 2014

சீனப் பெருஞ்சுவரும் கட்டுக்கதையும்மனிதர்களின் மாபெரும் அதிசயப் படைப்புகளில் கண்டிப்பாக சீனப் பெருஞ்சுவரும் ஒன்றானது என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை! ஆனால் பலரால் நம்பப் படும் ஓர் தவறான தகவல் என்ன தெரியுமா? மனிதர்கள் உருவாக்கியதில் அந்தச் சீனப் பெருஞ்சுவரை மட்டும் தான் விண்வெளியில் இருந்தும் பார்க்கமுடியும் என்கின்ற கட்டுக்கதை தான். உண்மை சொல்லப்போனால், மிக நுணுக்கமான காமெராவை கொண்டே, நாம் பார்ப்பது சீனப் பெருஞ்சுவர் தானா என்பதைத் தீர்மானிப்பதே கடினம்! அப்படி இருக்க, பரந்த பூமியில் ஒரு மிகவும் சிறிய பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கும் சீனப் பெருஞ்சுவரை, காண முடியும் என்பது முற்றிலும் சாத்தியம் இல்லாததாகும்.

இந்தக் கட்டுக்கதை விண்வெளியைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடங்கும் காலத்திற்கு முன்பில் இருந்தே பரப்பப்பட்டு வருகின்றது. பல மைல்களுக்குப் பரவி நின்று கொண்டு இருக்கும் சீனப் பெருஞ்சுவரின் பிரம்மாண்டமும், மக்கள் இந்த கட்டுக்கதையை ஏற்றுக் கொண்டதின் காரணமாக இருக்கலாம்.

விண்வெளியில் இருந்து மனிதன் காண முடிகின்ற, மனிதனால் உருவாக்கப்பட்ட மூன்று படைப்புக்கள் என்னவென்று கேட்டால், அது பெரிய நெடுஞ்சாலைகள், அணைகள் மற்றும் நகரங்கள் மட்டுமே. அதுவும் இவை அனைத்தும் வெளிச்சத்தில் மூழ்கி இருக்கும் நேரத்தில் மட்டும் தான் காண முடியும் என்பதே உண்மை.

சீனப் பெருஞ்சுவரோ மிக மிக மிகப் பெரியது தான். அதுவே பல சுற்றுவட்டாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட கற்பாறைகள் கொண்டு கட்டப்பட்டதால், அது கட்டப்பட்ட கற்களின் வண்ணத்தில் தான் இருக்கிறது. இதன் காரணத்தால் சீனப் பெருஞ்சுவரை விண்வெளியிலிருந்து கண்களால் இலகுவாகக் காணமுடியாது என்பது உண்மை ஆகும். எனவே, சீனா அதன் சுவரை பிங்க் நிறத்தில் மாற்றினால் ஒழிய, விண்வெளியில் இருந்து சீனச் சுவரைக் காண முடியும் என்பது, கட்டுக்கதையாக மட்டுமே மக்களின் இடையே வாழ்ந்து வரும்!

இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Can you see the Great Wall of China from Space


One of the greatest manmade wonders in this world is the Great Wall of China. There is no doubt in that! But the most famous myth associated with the Great Wall of China is that, it is the only man made wonder that can be viewed from the outer space. In reality, it is very difficult to identify the Great Wall of China even when viewed with an advanced camera of very high resolution. Then how can it be possible to view such a structure, which occupies just a fraction of area on the Earth from the outer space? It is highly impossible. This myth has been in existence well before the beginning of space researches. One of the reasons for the prevalent belief of this myth is the magnificence of the Great Wall of China which spreads across miles of distance.

The 3 manmade structures that are visible from the outer space are the giant highways, dams and cities and this is possible only when they are flooded by lights. Though the Great Wall of China is magnificent, it is difficult to be viewed from the space because it was built with rocks taken from the neighboring places which give the same color to the wall as well as the surroundings. So, it is possible to view it from the outer space only if the Government of China decides to paint it pink. Otherwise, the myth will remain as a myth forever.

Did you enjoy reading this Arivu Dose?  I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Jakub Hałun | Creative Commons by-sa 3.0, via Wikimedia Commons, changes were made.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

4 Comments

  • Joelstephenraj - 09/18/2014, 4:07 PM

    My like arivu dose

  • mohan - 08/17/2014, 2:40 PM

    Nice

  • Dheena Mathan - 04/17/2014, 11:38 AM

    thanx

  • Praveen Elango - 04/01/2014, 6:20 PM

    its correct