Natural Sciences Read in english

தசையைப் போல மூளையும் சோர்வடையுமா

By Niroshan Thillainathan on November 11th, 2014

Can my brain get tired?நாம் காலுக்கான பயிற்சியை செய்யும் போது, சிறிது நேரத்தில் காலின் தசைகள் சற்று சோர்வடைந்ததாகத் தோன்றும். அதே போல மூளைக்கும் சோர்வு ஏற்படக் காரணங்கள் ஏதாவது இருக்குமோ?

நமக்கு நடக்கும் செயல்கள் அனைத்தும் தெளிவில்லாமல் இருப்பதாகவே உணர்வோம். அப்படி உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டுள்ளதா? ஏற்பட்டிருந்தால், அது தான் மூளைச்சோர்வு! இந்த மூளைச்சோர்வுக்கான சரியான உயிர்வேதியியல் காரணங்கள் விஞ்ஞானிகளால் தெளிவாக வரையறுக்க முடியவில்லை என்றாலும், சில காரணங்களைக் கண்டறிந்துள்ளனர். நாம் மூளையினை எவ்வளவு பயன்படுத்துகிறோம், அதற்கு எவ்வளவு வேலை கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்து, இந்த மூளைச்சோர்வு ஏற்படக்கூடும்.

நாம் உடற்பயிற்சி செய்யும் போது உடலில் ‘லாக்டிக் அமிலம்’ உருவாக்கப்படுகிறது. இது நம்மை சோர்வடையச் செய்யாது, இது வெளியேற்றப்படுவதால் நமது உடலில் ஏற்படும் ஆற்றல் இழப்பினால் நமக்குச் சோர்வு ஏற்படுகிறது. மூளையிலும் நரம்பு செல்கள் வேலை செய்யும்போது இதுபோல் லாக்டிக் அமிலம் உருவாக்கப்படும், ஆனால் நரம்பு செல்கள் மீண்டும் அவற்றை எரிபொருளாக எடுத்துக்கொண்டு செயல்படும். அதனால் பெரும்பாலும் நமக்கு மூளைச்சோர்வு ஏற்படுவதில்லை.

உடலுக்கு குளுக்கோஸ் கொடுக்கும் உணவுப் பொருட்கள் மூளையின் சுறு சுறுப்பினை அதிகரிக்கிறது. ஆனால் நாம் அதிகப்படியான அளவிற்கு குளுக்கோஸினை உட்கொள்ளும்போது மூளைச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.

இந்த மூளைச்சோர்வினைப் பற்றிய செய்தி உங்கள் மூளைக்கு வேலை கொடுத்துள்ளதா, நண்பர்களே? இது பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Can my brain get tired?


When we exercise our legs, we are able to feel our leg muscles getting tired. Similarly, will there be any reason for the tiredness of our brain?

Sometimes we do not perceive the things happening to us clearly. Have you ever felt that way? If so, this is the symptom of your brain getting tired. Though the scientists are unable to pinpoint the exact biochemical reaction responsible for it, they have found some of the reasons. Depending on the usage of the brain and the work done by the brain, it gets tired.

When we exercise, lactic acid gets accumulated in our body. This does not make us tired. When it gets excreted from our body, the loss of energy associated with it causes tiredness. Similarly, lactic acid is formed during the functioning of the neurons. But the neurons reuse this lactic acid and prevent the brain from getting tired.

All the food items which provide glucose to our body increase the activity of the brain. If we take in too much glucose, there is increased chance for the brain to get tired.

Did this new information give some work to your brain? Post your comments about it here.

 


Shanghai killer whale | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.