Science & Mystery Read in english

சொர்க்கத்து நாணயங்கள்

By Niroshan Thillainathan on November 17th, 2014

சொர்க்கத்து நாணயங்கள்ஒரு நாணயத்தினை மிக உயரமான (என்பயர் ஸ்டேட் கட்டிடம் போன்ற) கட்டிடத்திலிருந்து நாம் கீழே போடும் போது, அது கீழேயுள்ள மனிதனின் தலையில் விழுந்தால் அவர் இறந்துவிடுவார் என்ற கட்டுக்கதை அநேக மக்களிடையே மனதில் பதிந்துள்ளது. இதற்குத் திரைப்படங்களும் ஒரு முக்கியக் காரணம்.

உண்மையில் ஒரு நாணயத்திற்கு மனிதனை அழிக்கும் அளவிலான சக்தி கிடைப்பதில்லை.  இவை ஏரோடைனமிக்ஸ் (aerodynamics) எனப்படும் காற்றின் விளையாட்டு தான். வானூர்தி அறிவியல் படிப்பவர்களுக்கு இதனைப் பற்றிய தனிப்பாடப்பிரிவே உள்ளது. இதில் கூறப்படுவது என்னவென்றால் ஒரு சாதாரண நாணயம் விழும்போது ஏற்படும் விசையின் அளவு மனிதனைக் கொல்லும் வல்லமை படைத்ததல்ல, மேலும் யாரின் மேல் அது விழுகிறதோ அவர்களுக்கு தலையில் கொட்டுவது போல் இருக்குமே தவிர, எந்த வித உயிர் பாதிப்பும் ஏற்படாது.

இந்த விடயம் உங்களுக்கு முன்பே தெரிந்தது தானா, நண்பர்களே? உங்கள் பதிலையும் மேலும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Can a coin dropped from a skyscraper kill you?


Most people believe in the myth that, when a coin is dropped from a very tall building (Empire state building) on someone’s head, he will die. Movies play an important role in spreading this belief.

In reality, a coin never gains the energy to kill a person. This is due to the aerodynamics. People who study Aeronautical science have a special subject regarding this science. According to this, the force of a falling coin is not sufficient to kill a man. Also, the person may feel nothing more than a mild knock on the head.

Did you know about this fact already? Post your reply and comments about this Arivu Dose below.


BigMac | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.