Future Sciences Read in english

சிறுநீரிலிருந்து செய்யப்படும் நரம்பணுக்கள்

By Niroshan Thillainathan on May 3rd, 2014

சிறுநீரிலிருந்து செய்யப்படும் நரம்பணுக்கள்நான் மிகவும் வியந்த விடயம் ஒன்று என்ன தெரியுமா? அண்மையில் சீன நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர், மனிதனின் சிறுநீரிலிருந்து சாதாரண அணுக்களை உற்பத்தி செய்து, அவைகளைக் கொண்டு நரம்பணுக்களை உருவாக்கும் அதிநவீன முறையைக் கண்டுபிடித்துள்ளனர். மருத்துவத் துறையில் நரம்புச்சிதைவு நோய்களைக் குணப்படுத்த இம்முறை பேருதவியாக அமையும்! பொதுவாகப் புதிய அணுக்களைக் கரு ஸ்டெம் செல்லைக் கொண்டு தான் உற்பத்தி செய்ய முடியும். இப்படியாகக் கையாளப்படும் முறையோடு இந்தப் புதிய முறையை ஒப்பிடும்போது, இப்புதிய முறை பல கோணங்களில் சிறந்தது என அறிய வந்துள்ளது. முதலாவதாக, கரு ஸ்டெம் முறையில் எலும்பு மச்சை (bone marrow) கொண்டு தான் அணுக்களை உற்பத்திச் செய்ய முடியும். எனவே, இந்த முறையைக் கொண்டு அதிகளவில் அணுக்களை உற்பத்திச் செய்ய இயலாது. மேலும், குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே இம்முறையைக் கையாண்டு அணுக்களை உற்பத்தி செய்ய முடியும். இதை விட, இம்முறையில் உற்பத்திச் செய்யப்படும் அணுக்களை மனிதனுக்குள் புகுத்தப்பட்ட சில காலத்தில், அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கின்றது. இம்மாதிரியான குறைகளைத் தீர்க்கும் வகையில் இந்த அதிநவீன முறை அமைகின்றது. சுருக்கமாகச் சொன்னால், சிறுநீரிலிருந்து புது அணுக்களை உற்பத்திச் செய்யும் முறை மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு ஒரு புதிய வடிவத்தை கொடுப்பதாக அமைகின்றது!

இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Brain cells made from urine


Do you know what surprised me the most? Recently, some scientists in China have found an advanced technology to culture normal cells from human urine and then produce nerve cells from them. This technology will be a medical boon to treat degenerative diseases of the nervous system! Usually, new cells are produced from the embryonic stem cells. When compared to that technique, this new technology is found to be highly advantageous. First of all, new cells from embryonic stem cells can be produced only using the bone marrow. Thus more number of cells cannot be produced by this method. Also, when the cells produced by this method are introduced into the body of a person, there are chances for them to get cancer. This new technology will rectify all these problems pertaining to the current method. This technology which cultures the cells from human urine has indeed given a new form to the medical world.


Turbotorque | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

2 Comments

  • Gánésh Jaï - 05/03/2014, 5:33 PM

    Avanga saptaga yenra thuku kaga namma sapida mudiyathu bro

  • Vigneswary Subramaniam - 05/03/2014, 3:03 PM

    இந்திய அரசியல் தலைவர்களான முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ், ஹரியானா முன்னாள் முதல்வர் தேவி லால் போன்றவர்கள் சிறுநீரைப் பருகி இருக்கின்றனர்.