Social Sciences Read in english

மாமேதை சீனிவாச இராமானுஜன்

By Niroshan Thillainathan on March 17th, 2014

மாமேதை சீனிவாச இராமானுஜன்125 ஆண்டுகளுக்கு முன்பு 22.12.1887 அன்று கணித மாமேதை ஒருவர் பிறந்தார். இன்று வரை பலரால் ஆங்கிலத்தில் கூட Mathematical Genius என்று அழைக்கப்படும் இவர், நமது தமிழர்களுக்கே பெருமை சேர்த்துத் தந்தவர் ஆவார். அது வேறு யாரும் இல்லை தமிழ் நாட்டைச் சேர்ந்த, தமிழர் ஆகிய சீனிவாச இராமானுஜன் அவர்கள் தான். இவரிலுள்ள வியப்பூட்டும் விடயம் என்ன தெரியுமா? 13 வயதிலேயே கணிதத்தின் அடிப்படையான ஆழ் உண்மைகளை யாருடைய உதவியும் பெறாமல் சுய முயற்சியில் கற்றுக்கொண்டார். தொடர்ந்து 15 வயதில் „Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics“ என்கிற புத்தகத்தைப் படித்ததில் இருந்து, இவர் 3,000கும் மேலான புதிய கணிதத் தேற்றங்களைக் (mathematical theorems) கண்டுபிடித்தார். இவரது தேற்றங்கள் இன்று இயற்பியல் முதல் மின்தொடர்புப் பொறியியல் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப் படுகின்றது.

கவலைக்கிடமான விடயம் என்னவென்றால், சீனிவாச இராமானுஜன் அவர்கள் 26.04.1920இல் 33 வயதிற்கு முன்னரே இறந்துவிட்டார். அவர் தொடர்ந்து பல்லாண்டுகள் வாழ்ந்து இருந்தால் இன்றைய கணிதத்தை மாற்றி அமைத்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை! இன்று இந்த மாமேதையைக் கௌரவிப்பதற்காக The Ramanujan Journal, Journal of the Ramanujan Mathematical Society மற்றும் Hardy–Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ்கள் வெளியிடப் படுகின்றது. அது மட்டும் இல்லாமல் அவர் பெயரில் சாஸ்த்ரா இராமானுஜன் பரிசு (SASTRA Ramanujan Prize), இன்று ஒவ்வொரு வருடமும் அவர் ஆர்வம்கொண்ட கணிதத் துறைகளில் சாதனை படைத்த கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

என்ன நண்பர்களே, இந்தத் தமிழரை நினைத்து நீங்களும் பெருமைப் படுகின்றீர்களா? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிடுங்கள்.


English Version

Biography of Mathematician Srinivasa Ramanujan


A great Mathematician was born 125 years ago on 22.12.1887. This Mathematical genius who has brought so much pride to the Tamil people is none other than Srinivasa Ramanujan, born in Tamil Nadu. One of the surprising facts about him is that, he learnt the deep fundamental basics of Mathematics at the age of 13, all by himself without anyone’s help. At the age of 15, he invented more than 300 mathematical theorems after reading the book, “Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics”.  Today, his theorems are used in many fields of science like Physics and Electronic Engineering. Unfortunately, he passed away on 26.04.1920 before his 33 years of age.

There is no doubt that, had he been alive, modern Mathematics would have been revolutionized. To honor this Genius, the Journals of Mathematics, the Ramanujan Journal, Journal of the Ramanujan Mathematical Society and Hardy-Ramanujan Journal are released. Also, in memory of him, The SASTRA Ramanujan prize is being awarded every year to aspiring Mathematicians who have done pioneering work in the field. Don’t you feel proud about this Tamilian? Post your comments below.


Konrad Jacobs | Creative Commons by-sa 2.0-de, via Wikimedia Commons, changes were made.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

115 Comments

 • Kandhasamy Pragash - 09/07/2014, 6:08 PM

  Yes

 • Zumry Mohamed - 09/07/2014, 5:44 PM

  Gánésh Jaï . Avar uyire poithane iranthar. Sathiyamaha

 • Vinoth Austin - 09/07/2014, 5:36 PM

  Ivar thana antha mathsah kandupidicha aalu .ivarala na rombe kastapadren

 • Hsejarvr Venkat - 09/07/2014, 5:33 PM

  avar irappu avaruku theriyum. athai avar kanithu vaithu irunthar.

  • Kailash Divya - 09/08/2014, 6:52 PM

   eppadi kanithu errunthar

  • Suresh Kumar - 09/07/2014, 6:25 PM

   yes its true

 • செந்தில் குமார் - 09/07/2014, 5:29 PM

  தமிழன்

 • Sha Hsihtas - 09/07/2014, 5:27 PM

  great mathematical man nan thalai vanangukuren

 • Gánésh Jaï - 09/07/2014, 5:27 PM

  Bro avar yapadi eranthar ?

 • Law Vino Ab - 09/07/2014, 5:21 PM

  evarai ponra oru maamethaiyai tamil mannil peranthathuku tamil thaaye perumai patukerathu valka bharatham

 • Archunaveera Arjun - 04/07/2014, 12:58 PM

  thamizh

 • கார்த்திக் கு - 03/20/2014, 10:56 AM

  அற்புதமான மனிதர்

 • Balasubramanian Chellappa Mcbaala - 03/18/2014, 9:26 AM

  he is the god

 • Balasubramanian Chellappa Mcbaala - 03/18/2014, 9:26 AM

  he is god

 • Sivanesan Nesan - 03/17/2014, 2:00 PM

  basic is important he is an example…