Natural Sciences

தேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்

By Niroshan Thillainathan on December 11th, 2015

Bees - One of the smartest animals in this world தேனீக்கள் ஒவ்வொரு பூவாகச் சென்று தேனைச் சேமிக்கும், தேன் கூட்டில் கல்லைக் கொண்டு எறிந்தால் கொட்டவரும் என்று போதுமான அளவுதான் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அவை உண்மையில் புத்திசாலித்தனமான பூச்சிகள். தேனீக்களால் அதிநவீன முறையில் தொடர்பு கொள்ள முடியும், அதுமட்டுமின்றி அவற்றின் கண் பார்வைக்கு அப்பாற்பட்டிருக்கும் இலக்குகளைக்கூட உணர முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தேனீக்கள் மேலும் கீழுமாக ஆடிக்கொண்டு ஒன்றையொன்று தொடர்புகொள்வதாக பெரும்பாலானோர் கருதுகின்றனர், ஆனால் இவ்வாறு ஆடிக்கொண்டு தொடர்புகொள்வதில் ஒரு அறிவியல் யுக்தியுள்ளது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. தேனீக்களுக்கு நமது உலகம் உருண்டையாக இருப்பது தெரியும், அதனால் ஒரு உணவு எடுக்க சென்றுவிட்டு மீண்டும் வரும்போது தனது கூட்டினை அடைவதற்கு வரும்போது, மேலும் கீழும் ஆடும் தேனீக்களைப் பார்த்து தான் இருக்கும் இடத்தில் இருந்து எந்தக் கோணத்தில் சென்றால் கூட்டினை அடைய முடியும் என்பதைத் தெரிந்துகொள்ளும். இதேபோல்தான் உணவு எங்குள்ளது என்பதையும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு தகவலைப் பகிர்ந்துகொள்கிறது. இந்த மேலும் கீழுமாக ஆடும் ஆட்டத்தினை வைத்து சூரியனை நோக்கிச் செல்ல வேண்டுமா, சூரியனை விட்டு விலகிச் செல்ல வேண்டுமா அல்லது அங்கிருந்து எப்பக்கம் திரும்ப வேண்டும் என்று புரிந்துகொள்ளும். அதுமட்டுமின்றி பூமியின் சுழற்சி மற்றும் மின்காந்த அலைகளைக் கணக்கிட்டு சரியான இடத்தினையும் இவற்றால் ஞாபகப்படுத்திக் குறிப்பிட முடியும்.

இப்போது சொல்லுங்கள் நாம் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கும் தேனீக்கள் அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள் தானே? உங்களுக்கு இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? இது பற்றிய உங்கள் அபிப்பிராயத்தைக் கண்டிப்பாக எனக்கு எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.