Science & Mystery Read in english

600 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலடித்தடங்கள்

By Niroshan Thillainathan on December 19th, 2014

Antelope springs footstepsஜூன் 1, 1968இல் படிம ஆராய்ச்சியாளரான வில்லியம் ஜே. மெய்ஸ்டெர் தனது குடும்பத்துடன் ஆன்டெலோப் ஸ்பிரிங்க்ஸ் எனும் இடத்திற்கு ஓர் பயணத்தினை மேற்கொண்டார். தனது ஆராய்ச்சிக்கான உபகரணங்களை வீட்டிலேயே வைத்துவிட்டுச் சென்றாலும், அவர் தனது படிம ஆராய்ச்சிக்காக சில படிமங்களைத் தேடினார். இறுதியில் தான் கிடைத்தது அந்த வித்தியாசமான படிமங்கள்.

இரு காலடித்தடங்களைப் போன்ற படிமங்கள் கிடைத்தன, அதில் ஒன்றின் குதிகால் மற்றதை விட அதிகமாக அழுத்தி இருந்தது. கண்டிப்பாக ஷூ போன்ற காலணிகளை அணிந்த ஒருவர் நின்ற இடம் நமக்கு படிமமாகக் கிடைத்திருக்கிறது என அவர் எண்ணினார்.

அதை தமது ஆராய்ச்சிக் கூடத்திற்கு எடுத்துச் சென்று தனது குழுவினருடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதில்தான் தெரிந்தது அந்தப் படிமங்கள் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று. அவர்கள் அந்த இடத்திற்குச் சென்று ஆராய்ந்ததில், நன்கு தொகுக்கப்பட்ட சேறினால் ஆன பல அடுக்குகள் இருந்தன. ஒரு காலத்தில் அவை வாழ்நிலமாக இருந்திருக்க வேண்டும் என அவர்கள் ஊகித்தனர். மேலும் அங்கு நீர்வாழ் உயிரினங்கள் இருந்ததற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த வகைப் படிமங்கள் மட்டும் எப்படி உருவானது?

இது மர்மமாக இல்லையா? இது பற்றிய உங்கள் கருத்து என்ன நண்பர்களே? இந்தக் காலடித்தடங்கள் யாருடையதாக இருக்கக்கூடும்? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Antelope springs footsteps


In 196–, Archaeologist William J Meister went for a trip in Antelope springs with his family. Although he left his archaeological tools at his home, he searched for some fossils. Finally, he found some unique fossils.

The fossil looked like that of 2 foot prints and the heel of one foot print appeared to be more prominent as if it was pressed down more. He thought that he had found the fossil of foot print of someone wearing a shoe.

He took the fossil back to his lab and studied it with his team in which he found out that the age of the fossil was more than 600 million years ago. When they returned to Antelope spring, they found multilayered sediments of clay. They speculated that those places should have been habitats long back. There was no evidence suggesting the existence of water creatures. It’s a mystery how these fossils were formed.

Do you have any thoughts about these mysterious foot prints? Post your comments below.

 


Yathin S Krishnappa | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.