Social Sciences Read in english

அவதார் படத்தில் வந்த உயிரினங்கள்

By Niroshan Thillainathan on February 19th, 2015

 Ancient flying reptile named after ‘Avatar’ creatureஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ திரைப்படத்தினை மறக்கவே முடியாது. அந்தளவிற்கு மனித கற்பனையினை திரையில் காட்டிய படம் அது. ஆனால் அது போன்ற உயிரினங்கள் ஏற்கனவே உலகில் வாழ்ந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம். விஞ்ஞானிகள் சீனாவில் செய்த படிம ஆராய்ச்சியில் ஒரு புதிய உயிரினத்தின் குறிப்புகள் கிடைத்துள்ளன.  Pterosaur என்று பெயரிடப்பட்டுள்ள இவை பறக்கும் தன்மையுள்ள ஊர்வன இனத்தினைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனவும், இவை சுமார் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் யூகித்துள்ளனர். இதனை “Ikrandraci avatar” என்று அழைக்கின்றனர். இதன் காரணம் இந்த உயிரினம் அந்த திரைப்படத்தில் வரும் உயிரினங்களைப் போல்தான் இருந்திருக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

இது பற்றிய மேலும் கூறிய அறிவியலாளர்கள், இந்த உயிரினங்கள் சிறிய மீன் வகைகளை உண்டு வாழ்ந்திருக்க வேண்டும், அத்துடன் இவை பறப்பதற்கு சுமார் 8 அடியினைக் (2.5 மீட்டர்) கொண்ட இறக்கைப் பகுதி இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். வௌவால் போன்ற உயிரினங்கள் இவற்றின் வழித்தோன்றலாகவும் இருக்கலாம் எனக் கருதுகின்றனர். டைனோசர் அழிந்தவை போன்று, இவையும் பேரழிவுகளில் சிக்கி அழிந்திருக்கலாம் என அவர்கள் கருதுகிறார்கள்.

இது சுவாரசியமாக இல்லையா நண்பர்களே? இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? இது பற்றிய உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Ancient flying reptile named after ‘Avatar’ creature


We can never forget James Cameron’s Hollywood Box Office hit “Avatar”. It exemplarily featured the human imagination on screen. But, can you believe that such creatures have lived on this world for real?

Yes! New information has been found in the fossil research conducted by the scientists in China. Scientists have speculated that this creature called Pterosaur might have belong to the family of flying reptiles and lived about 1200 million years ago. They call it “Ikrandraci Avatar” and believe that its physical and morphological features would have been similar to that of the creature in the movie.

Scientists say that they could have fed on small fishes and have had a wing span of about 8 feet (1.2 meter). They also say that birds like bats could have been descendants of these creatures. These creatures could have become extinct in the same way as that of the dinosaurs by some natural disaster.

Isn’t it interesting? Post your comments about this Arivu Dose below.


Mark Witton and Darren Naish | Creative Commons by-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.