Natural Sciences Read in english

அமிக்டாலா – பயத்தைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி

By Niroshan Thillainathan on April 13th, 2014

அமிக்டாலா - பயத்தைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிபயம் என்கிற மனித உணர்வு உலகளவில் இன்று விஞ்ஞானிகளால் நன்றாகவே புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. பொதுவாக நாம் பிறரின் நடத்தை, உணர்வுகள், அறிகுறிகள் மூலமும் மேலும் அவர்களின் முக பாவனைகளைப் பார்த்தும் ஒருவரின் பயத்தைப் புரிந்து கொள்கிறோம். மனிதனின் எல்லா உணர்வுகளும் போல் பயம் என்கின்ற உணர்வும் கூட நமது மூளைக்குள் தான் உருவாகின்றது. குறிப்பாக அமிக்டாலா (Amygdala) என அழைக்கப்படும் மூளையின் ஓர் பகுதி தான் அதற்குப் பொறுப்பாக இருக்கின்றது.

மனிதர்கள், குரங்குகள், எலிகள், பிற உயிரினங்கள் எதுவாக இருந்தாலும், மூளையின் அமிக்டாலா பகுதியே பயத்தைக் கட்டுப்படுத்துகின்றது. ஆனால், ஹைன்ரிக் க்ளூவர் (Heinrich Kluver) மற்றும் பால் ப்யூஸி (Paul Bucy) என்கின்ற இரு நரம்பணுவியல் விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையில் ஓர் வியப்பூட்டும் விடயத்தை கூறி இருக்கின்றார்கள். அது என்னவென்றால், ஒருவரின் மூளையில் உள்ள அமிக்டாலாவை அகற்றிவிட்டால் அந்த நபர் முற்றிலும் அச்சமற்றவராகலாம் என்பதை நிரூபித்து இருக்கின்றார்கள். அவர்களின் ஆராய்ச்சியில், அமிக்டாலா அகற்றப்பட்ட குரங்குகள், சாதாரண குரங்குகளைக் காட்டிலும், அமைதியாகவும், ஆக்ரோஷம் குறைந்தும் காணப்பட்டன. அது மட்டுமில்லை, அறுவை சிகிச்சைக்கு முன், மனிதர்களைக் கண்டு பயந்த குரங்குகளுக்கு, சிகிச்சைக்குப் பின், மனிதர்களின் மேல் ஒரு அலட்சிய அணுகுமுறையே இருந்தது. ஆனால் இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்ன தெரியுமா? பயம் என்கின்ற உணர்வு நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் அத்தியாவசியமானது! பயம் இருப்பதால் தான் நாம் முட்டாள் தனமாக ஒரு விடயமும் செய்யாமல் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எனவே, அளவான பயம் இருப்பது மிகவும் நன்று தான்!

ஆனால் ஒன்று நண்பர்களே! தெனாலி பட கமல் ஹாசன் „விதை பயம் எனக்கு, கதை பயம் எனக்கு, பீமன் கதைக்கும், அனுமன் கதைக்கும் பயம், உதைக்கும் பயம், சிதைக்கும் பயம், கதவு பயம் எனக்கு, கொஞ்சம் திறந்த கதவும் பயம், முழுசா மூடின கதவும் பயம், பூட்டு போட்ட கதவென்றாலும் பயம் எனக்கு“ என்று எல்லாம் கூற ஆரம்பிக்கும் போது, டாக்டர் பஞ்சபூதம் செய்திருக்க வேண்டியது ஒன்றே ஒன்று தான். தெனாலியின் அமிக்டாலாவை நீக்கி இருந்து இருக்கனும். அத்துடன் அவர் பிரச்சனையே தீர்ந்து இருக்கும். என்ன சொல்கிறீர்கள் :D?

இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Amygdala is the part of the brain which is responsible for fear


Today, the sense of fear is better understood by scientists. We understand fear by looking at someone’s behavior, feelings, gestures and facial expressions. Similar to all human feelings, fear also originates from the brain, especially from a specific region called as the Amygdala.

Be it humans, primates, rodents or any animal, the sense of fear is controlled by Amygdala. But, Henrich Kluver and Paul Bucy, two neuroscientists have given surprising information in their report. They have proved that a man can be devoid of any fear at all, if his Amygdala is completely removed. In their research, the primates whose amygdale was removed were calmer and less aggressive when compared to other primates. Also, the primates who were scared of human beings before their surgeries acted fearless and indifferent to men after removal of Amygdala. What is important is that the sensation of fear is necessary for the survival! It is this fear that prevents us from doing stupid things in our life. So, it is necessary to have the right amount of fear.

Do you know what the Doctor should have done to Actor Kamal Hassan when he acted as a person with multiple phobias in the Tamil movie “Thenali”? He should have removed his Amygdala and put an end to it. Did you like this Arivu Dose? Post your comments here.


MyName (Bantosh) | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

1 Comments

  • Gánésh Jaï - 04/13/2014, 1:35 PM

    Yanaku pei payam matum than eruku…..:-P