Natural Sciences Read in english

ஜெல்லிமீன்கள் எனும் அதிசயம்

By Niroshan Thillainathan on October 6th, 2014

ஜெல்லிமீன்கள் எனும் அதிசயம்ஜெல்லிமீன்கள் தண்ணீருக்குள் இருக்கும்போது நம்மை மிரட்டுவது போலத் தோன்றும். அவற்றின் செய்கையால் நமக்கு மின்சாரம் பாய்ந்ததுபோல் தோன்றும், இப்படி நமக்கே ஆட்டம் காட்டும் இந்த ஜெல்லிமீன்கள் கரையில் ஒதுங்கிவிட்டால் அதன்பாடு திண்டாட்டம் தான். இதிலென்ன ஆச்சரியம் மீன் தரைக்கு வந்தால் பிரச்சனை தானே, என நீங்கள் கேட்கலாம், ஆனால் இந்த ஜெல்லிமீனுக்கு இருக்கும் இன்னொரு பிரச்சனை சூரியன் ஆகும்.

கரையொதுங்கிவிட்டால் இவை ஒரு சில மணி நேரத்திற்குள் காணமலே போய்விடுவன. இதற்குக் காரணம் ஜெல்லிமீனில் உள்ள 98 சதவீத தண்ணீர் தான். கரைக்கு வந்த சில மணி நேரத்திற்குள் வெகுவாக ஆவியாகத் தொடங்கும் இந்த ஜெல்லிமீன்கள், தெளிவான ஒளிபுகக்கூடிய (transparent), மணி போன்ற உடலமைப்பினைக் கொண்டவை. இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், இவற்றிற்கு மூளை, எலும்பு அல்லது இதயம் என எதுவும் இல்லை. இதனால் எந்த அடிப்படை உணர்வுகளும் இவற்றிற்குக் கிடையாது.

இதுபோல் நமக்குத் தெரியாத அதிசய உயிரினங்கள் இன்னும் பல லட்சக்கணக்கில் இந்த உலகில் உள்ளன. இது சுவாரசியமாக இல்லையா நண்பர்களே? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Amazing Facts about Jellyfish


The Jellyfish is a scary organism when we see them inside water. Their actions make us feel as if being electrocuted. Such scary ones! But they get into trouble when they are washed ashore. You may wonder that it’s obvious as it is a fish out of water. But one more thing that bothers the Jelly fish is the Sun. Once washed ashore, the Jelly fishes disappear within hours. This is because, 98% of the Jelly fish is made up of water and within few hours this water gets evaporated. The body of the Jelly fish is transparent and they don’t have any organs like brain, bones or heart. So they can’t experience any sensation. Isn’t it unbelievable? There are so many amazing creatures in this world.

Did you enjoy reading this Arivu Dose?  I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Paroxysm | Creative Commons by-sa-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.