Niroshan Thillainathan

Niroshan Thillainathanஎனது பெயர் நிரோஷன் தில்லைநாதன் (Niroshan Thillainathan). இலங்கை திருகோணமலையில் பிறந்து இரண்டு மாதங்களிலே ஜேர்மனி வந்த நான், இன்று M.Sc. Computer Science (கணினியியல்) படித்து முடித்துவிட்டு தற்போது அதே துறையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெறும் இறுதிக் கட்டத்தில் இருக்கின்றேன். சிறு வயதில் இருந்தே எனக்கு அறிவியலில் ஓர் காதல் வந்துவிட்டது. இயற்கை அறிவியல், வானியல், சமூக அறிவியல், நடத்தை அறிவியல், எதிர்கால அறிவியல் மற்றும் தொழினுட்பம் போன்ற அனைத்திலுமே இன்று வரை எனது முழுமையான கவனமும் காந்தம் போல் இழுக்கப் படுகின்றது.

அறிவியல் என்றால் என்ன? ஏதாவது ஒன்று ஏன், எதனால் மற்றும் எப்படி இயங்குகின்றது என்பதை உறுதியாக அறிவு அடிப்படையில் ஆராய்வதை அறிவியல் என்று கூறப்படுகின்றது. அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன். எனது அறிவு டோஸ்கள் உங்களுக்குப் பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை தெரிவித்துவிடுங்கள்.

என்னைத் தொடர்பு கொள்ள விரும்பினால், அதை முகப்புத்தகம் ஊடாகப் பண்ணலாம்.

அன்புடன்
நிரோஷன் தில்லைநாதன் (Niroshan Thillainathan)