Astronomy Read in english

ஒரு நாள், ஒரு ஆண்டை விட நீளமானது.

By Niroshan Thillainathan on May 12th, 2014

ஒரு நாள், ஒரு ஆண்டை விட நீளமானது.நீங்கள் இரவு நேரத்தில் வானத்தைக் கவனித்தால், ஒரு பிரகாசமான கோளைப் பார்க்கலாம். அது தான் சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள வெள்ளி, சுக்கிரன் அல்லது வீனஸ் (Venus) என்று அழைக்கப்படும் கோளாகும். பல ஆண்டுகளாக, பண்டைய மக்கள், சில வேற்று கோள் அரக்கர்கள் வீனஸில், மேகங்களின் கீழ் வாழ்வதாக நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்பொழுது, வினஸின் கடும் வெப்பத்தால் இது சாத்தியம் இல்லை என்பது நமக்குத் தெரியவந்துள்ளது. இன்றைய அறிவு டோஸில் இந்த வீனஸ் கோள் பற்றிய மிகவும் சுவாரசியமான தகவல்களை அறியத் தருகிறேன்.

வீனஸ் பல அற்புதமான இயல்புகளைக் கொண்டுள்ளது. வீனஸும் பூமியும் இரட்டைக் கோள்களாகவே பெரும்பாலும் கருதப்படுகின்றன. இதற்குக் காரணம் வீனஸும் பூமியும் எறத்தாழ ஒரே அளவில் இருப்பதும், இரு கோள்களும் ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் இருப்பதும் தான். இது இரண்டிலும் ஒற்றுமைகள் இருந்தாலும், இவ்விரு கோள்களும் மிகவும் மாறுபட்டனவாகவே உள்ளன.

ஆனால், இதில் எல்லாவற்றிலும் என்னை மிகவும் வியக்க வைத்த விடயம் என்ன தெரியுமா? வீனஸில் ஒரு நாள், அதன் முழு ஆண்டை விட நீளமானது என்கிற உண்மை தான்! இதன் விளக்கத்தைப் படிக்கும் முன் இது எப்படி சாத்தியம் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் நண்பர்களே! இதற்குக் காரணம் அதன் சுழற்சி தான். வீனஸ் தன்னைத் தானே சுற்றி வர, மிகவும் மெதுவாக, பூமியின் நாள் கணக்கின்படி 243 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. மாறாக, பூமிக்கு இதே சுழற்சிக்கு 24 மணி நேரம் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும், வீனஸ் சூரியனைச் சுற்றி வர, பூமியின் நாள் கணக்கின்படி 225 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. எனவே, வீனஸில் ஒரு நாள் அதன் ஒரு ஆண்டை விட நீளமானது.

என்ன நண்பர்களே, இது அதிசயம் தானே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

A venus day is longer than a venus year


When you look at the night sky, you can see a bright planet. It is the second planet from the Sun – the Venus. For many years, the ancient people believed that some alien demons are living under the clouds of the Venus. But we have learnt recently that it is highly impossible because of the high temperature in the Venus. Let me present you some of the interesting facts about this planet.

Venus has many fascinating features. The Venus and the Earth are always considered as twin planets. This is because of their almost equal size and the little distance between them. Though they are similar in these two characteristics, both the Earth and the Venus are completely different planets in other aspects.

Do you know what impresses me more? It is a fact that one day in Venus is longer than its one year. Before reading the explanation, just think about this possibility for a moment. The reason behind this bizarre fact is the rotation of the Venus. Venus takes about 243 Earth days to rotate on its axis. But Earth takes just 24 hours to complete one rotation. Also Venus takes 225 days to complete one revolution around the Sun. Thus, one day on Venus is longer than its one year.

Isn’t it surprising? Post your comments below.


NASA | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

20 Comments

  • Mahendraselvan D. - 11/10/2014, 5:55 AM

    நல்ல தகவல்.

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 05/13/2014, 2:39 PM

    மிக்க நன்றி நண்பர்களே Gu Ru, Mani Kandan, DK Malai, Mohamed Faseer, Rakesh S Shanmugam, Naresh Selvam, Naga Raj, Ramdas Rdx Nadar, Thangapandian Pandian, Saro R Saro, Vino Babu :)!

  • Gu Ru - 05/13/2014, 11:18 AM

    thanx

  • Mani Kandan - 05/13/2014, 9:11 AM

    good job admin.., keep it up..,

  • DK Malai - 05/13/2014, 9:01 AM

    wow

  • Mohamed Faseer - 05/13/2014, 7:04 AM

    Wow Amazing.

  • Mohamed Faseer - 05/13/2014, 7:04 AM

    Wow. Amazing.

  • Rakesh S Shanmugam - 05/12/2014, 8:35 PM

    Super appu

  • Naresh Selvam - 05/12/2014, 6:46 PM

    thanks for a good information

  • Naga Raj - 05/12/2014, 6:40 PM

    thanks

  • Ramdas Rdx Nadar - 05/12/2014, 6:26 PM

    arivu dose energy dose

  • Thangapandian Pandian - 05/12/2014, 3:21 PM

    wow super info……

  • Saro R Saro - 05/12/2014, 2:37 PM

    nice

  • Vino Babu - 05/12/2014, 2:06 PM

    Thanks 4 ur info..

  • Gánésh Jaï - 05/12/2014, 1:24 PM

    Super news….thxq

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 05/12/2014, 1:34 PM

      மிக்க நன்றி Gánésh Jaï :)!

  • Chitra Manohar - 05/12/2014, 1:20 PM

    Wow super information

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 05/12/2014, 1:34 PM

      நன்றி Chitra Manohar :)

  • Hemalatha Arasan - 05/12/2014, 1:10 PM

    Amazing fact….

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 05/12/2014, 1:34 PM

      Thank you Hemalatha Arasan :)