Astronomy Read in english

செவ்வாய் கிரகத்தில் தோன்றிய மர்மமான வெளிச்சம்

By Niroshan Thillainathan on December 25th, 2014

A mystery light on marsநாசாவின் கியூரியாசிட்டி எனும் இயந்திரம் (ரோவர்) செவ்வாய் கிரகத்தின் பல்வேறு செயல்முறைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறது. இதில் 02.04.2014 மற்றும் 03.04.2014 ஆம் தேதிகளில் ஒரு ஒளி வெளிச்சம் அதன் புகைப்படங்களில் பதிந்துள்ளது.

இந்த ரோவர் ‘கிம்பெர்லி’ என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதியில் புகைப்படங்களையும் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. அது அனுப்பிய ஆயிரக்கணக்கான புகைப்படங்களில் இருந்து இந்த வெளிச்சம் காணப்பட்ட புகைப்படங்கள் தனியே பிரித்தெடுத்து ஆராய்ச்சி செய்யப்பட்டது.

இந்த வெளிச்சம் ஏற்பட்ட பகுதி ரோவர் இருந்த இடத்திலிருந்து சுமார் 160 மீட்டர் தொலைவில் இருக்கலாம் என கூறப்படுகிறது. காஸ்மா கதிர்களின் தாக்கத்தினாலோ அல்லது சூரிய ஒளியினை பிரதிபலிக்கக்கூடிய பாறைகளினாலோ இந்த வெளிச்சம் ஏற்பட்டிருக்கலாம் என இதன் செயல்பாட்டுத் தலைவர் ‘மக்கி’ தெரிவித்துள்ளார்.

யாருமே இல்லாத இடத்தில் திடீரென தோன்றிய வெளிச்சம் கண்டிப்பாக விஞ்ஞானிகளின் கவனத்தினை ஈர்த்திருக்கும். ஏற்கனவே பிற கோள்களில் நாம் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சிகள் அதிவிரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கிடைத்த இந்த வெளிச்சம் நமக்கு ஒரு துருப்புச்சீட்டாகக் கூட இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர்.

இது பற்றிய உங்கள் கருத்து என்ன நண்பர்களே? இந்த வெளிச்சம் என்னவாக இருக்கலாம்? உங்கள் பதிலையும் மேலும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

A mystery light on mars


NASA’s Curiosity (Mars Rover) has been collecting information about different aspects of Mars. On 2.4.2014 and 3.4.2014, it has captured a picture of a light. This Mars rover has been studying and taking pictures of the area called Kimberly on the Mars. Out of thousands of pictures sent by it, those with this mysterious light have been isolated and studied. It is estimated that the source of this light might be about 160 km from the rover. Its operating leader Mr.Makki says that it might have been due to the effects of cosmic rays or due to rocks reflecting the sunlight. The sudden appearance of light in an uninhabited planet has aroused interest among the scientists. As the researches to find other planets which support life are under their way, scientists say that this mysterious light might be the trump card to these researches. What is your opinion about this light? Post your comments below.


NASA | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.